Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க...
சருமத்தை அழகாக்குவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஃபேஸ் மாஸ்க். இந்த ஃபேஸ் மாஸ்க் போடுவதற்கு வீட்டிலேயே பல அழகுப் பொருட்கள் உள்ளன. அவ்வாறு ஃபேஸ் மாஸ்க்கில் பயன்படுத்தும் பொருட்களில் சில பொருட்கள் அனைத்து ஃபேஸ் மாஸ்க்கிலும் பயன்படுத்துமாறு பொதுவானதாக இருக்கும். உதாரணமாக, தேன், பால், எலுமிச்சை சாறு மற்றம் தயிர் போன்றவை அனைத்து ஃபேஸ் மாஸ்க்கிலும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாகும்.
மேலும் இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான நன்மைகள் அடங்கியிருப்பதால் தான், அதனை அனைத்து மாஸ்க்கிலும் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இதனை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும். எனவே தான், இந்த பொருளை அனைத்து மாஸ்க்கிலும் பயன்படுத்துகிறோம்.
அந்த வகையில் பாலில் லாக்டிக் ஆசிட் மற்றும் இயற்கை எண்ணெய் நிறைந்திருப்பதால், அதனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சரும வறட்சி நீங்கி, சருமம் பொலிவோடு பட்டுப் போன்று மின்னும். மேலும் பால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி, போதிய சத்துக்களை வழங்கி, வெயிலால் பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பித்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். குறிப்பாக, பாலைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்தால், பால் போன்ற நிறத்தைப் பெறலாம்.
அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தைப் பராமரிக்க பால் ஒரு சிறந்த பொருள். இப்போது அந்த பாலைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போட்டால், என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

குளிர்ந்த பால்
வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்ததும், பாலை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடும், வறட்சியின்றியும் இருக்கும்.

பாதாம்
உடனே முகம் பொலிவோடு காணப்பட வேண்டுமென்று நினைத்தால், பாதாமை அரைத்து, அதில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

தேன்
பெரும்பாலான பால் ஃபேஸ் மாஸ்க்கில் தேன் சேர்க்கப்படும். ஏனெனில் தேன் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். அதிலும் பாலில் தேன் மற்றும் கடலைமாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்தால், முதுமை தோற்றமானது தடைபடும்.

கடலை மாவு
பாலுடன் சேர்த்து செய்யப்படும் ஃபேக்கில் கடலை மாவு, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து போட்டால், சருமம் வெள்ளையாவதோடு, பருக்கள் வராமலும் தடுக்கலாம்.

சந்தனப் பொடி
முகப்பரு, கரும்புள்ளிகள், பிம்பிளால் வந்த தழும்புகள் போன்றவற்றை போக்க சிறந்த ஃபேஸ் பேக் என்றால், சந்தனப் பொடியில் பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவுவதே ஆகும்.

எலுமிச்சை
எலுமிச்சை ஒரு ப்ளீச்சிங் பொருள் என்பதால், இதனை பால் மற்றும் தயிர் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், பருக்கள், பிம்பிள், பொலிவிழந்த சருமம் போன்ற பிரச்சனையைப் போக்கலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும்.

ஓட்ஸ்
வீட்டிலேயே ஸ்கரப் செய்ய வேண்டுமெனில், ஓட்ஸில் பால் மற்றும் தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இதனால், சருமத் துளைகளில் தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

தயிர்
பால் மற்றும் தயிர் சேர்த்து செய்வது சிறந்த பலனைத் தரும். அதிலும் இவற்றுடன் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து மாஸ்க் போட்டால், முக பளிச்சென்று மின்னும்.

தக்காளி
தக்காளியில் முதுமைத் தோற்றத்தை தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. அத்தகைய தக்காளியை அரைத்து, அதனுடன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, கழுவினால், முதுமைக் கோடுகளை தவிர்ப்பதோடு, வெள்ளையாகவும் மாறலாம்.



Click it and Unblock the Notifications