Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கா? இத ஞாபகம் வெச்சுக்கோங்க...
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருவானது தற்போது பெரும்பாலானோரின் முகங்களில் அதிகம் இருப்பதோடு, முகத்தின் அழகையே கெடுத்துவிடுகிறது. குறிப்பாக இதில் இளம் வயது பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பலர் அதனை கைகளாலேயே பிய்த்து எரிந்துவிடுகின்றனர். இவை மட்டும் முகப்பருக்களைப் போக்குவதற்கு வழியில்லை. இத்தகைய முகப்பருக்களை போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. உதாரணமாக, எலுமிச்சை, சந்தனப் பொடி, தேன், கற்றாழை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு போக்கலாம்.
இருப்பினும், அவற்றை முகத்தில் தடவினால் மட்டும் போதாது. ஒருசிலவற்றையும் பின்பற்ற வேண்டும். அதில் முதன்மையானது சுத்தம். பருக்கள் இருப்பவர்கள் அதனைப் போக்குவதற்கு முதலில் சுத்தமாக இருப்பதோடு, ஒருசிலவற்றையும் மனதில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றினால், பருக்களை எளிதில் போக்கலாம்.

பருக்களை கிள்ளக்கூடாது
பருக்களை கிள்ளினால் சீக்கிரம் போய்விடும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் பருக்களை கிள்ளினால், அவை அந்த நேரத்தில் போய்விடும். ஆனால் அவை கரும்புள்ளிகளாக மாறிவிடுவதோடு, கிள்ளும் போது அதிலிருக்கும் நீர்மம் சருமத்தில் பரவி பருக்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.

கழுவுதல்
பருக்கள் அதிகம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை கழுவினால் தான், முகத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய்கள் போன்றவை வெளியேறி, பருக்கள் குறையும்.

தொடக்கூடாது
பருக்கள் முகத்தில் இருந்தால், முகத்தை அடிக்கடி தொடக்கூடாது. அவ்வாறு தொட்டால், கைகளில் உள்ள அழுக்களினாலேயே அவை பெரிதாகிவிடுவதோடு, உடைந்து பரவ ஆரம்பிக்கும்.

மேக்-கப் பிரஷ்களை சுத்தப்படுத்தவும்
எப்போது மேக்-கப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாசுடன் இருக்கும் பிரஷ்களை முகத்தில் பயன்படுத்தினால், அதில் உள்ள பாக்டீரியாக்கள், பருக்களை உடைய வைக்கும். எனவே எப்போதும் முகத்தில் பயன்படுத்தும் மேக்-கப் பிரஷ்களை நீரில் அலசி, காய வைத்து, பின்னரே முகத்தில் பயன்படுத்த வேண்டும்.

மேக்-கப்பை நீக்கவும்
எப்போதும் தூங்கும் முன், முகத்தில் உள்ள மேக்-கப்பை நீக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்தால், பருக்கள் முகத்தில் ஏற்படுவது தடுக்கப்படும்.

எண்ணெயில்லா ஃபௌண்டேஷன்
பருக்கள் இருந்தால், முகத்திற்கு எண்ணெயில்லா ஃபௌண்டேஷனை பயன்படுத்த வேண்டும். இதனால் பருக்கள் மறைக்கப்படுவதோடு, அவை வருவதும் தடுக்கப்படும்.

தண்ணீர் பருகவும்
நிறைய தண்ணீர் பருகினால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறும். இதனால் சருமம் பாதிப்படைவதையும், முகப்பருக்கள் வருவதையும் தடுக்கலாம்.

முடியை கட்டவும்
எப்போதும் முடியை முகத்தில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முடியில் உள்ள எண்ணெயால் பருக்கள் அதிகமாகும்.

நன்கு தூங்கவும்
தூக்கமின்மையும் சருமத்தை பாதிக்கும். எனவே எப்போதும் அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில், நன்கு தூங்க வேண்டும். இதனால் முகம் பொலிவோடு பருக்களின்றி இருக்கும்.

ஃபேஸ் பேக்
பருக்களை போக்குவதற்கு பல இயற்கை ஃபேஸ் பேக்குகள் உள்ளன. ஆகவே பருக்களை போக்க வேண்டுமெனில், மேற்கூரிய செயல்களை பின்பற்றி, அத்துடன் ஃபேஸ் பேக்குகளை போட்டால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் வாரத்திற்கு இரண்டு முறை போட வேண்டும்.



Click it and Unblock the Notifications
