Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
அழகான முதுகு வேண்டுமா? அப்ப இத படிச்சு பாருங்க...

அழகான முதுகைப் பெறுவதற்கான சில டிப்ஸ்...
* சூடான நீரில் குளித்தால், முதுகு நன்கு பளிச்சென்று காணப்படும். ஏனெனில் சுடு நீரில் நன்றாக தேய்த்து குளிக்கும் போது, சருமத் துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முதுகு நன்கு பொலிவோடு மின்னும். ஒரு வேளை உடலுக்கு ஆவி பிடிக்க அதாவது ஸ்டீம் செய்ய போகும் போது, மறக்காமல் உடலுக்கு எண்ணெயை தடவிக் கொண்டு, 10-15 நிமிடம் ஸ்டீம் சாம்பரில் உட்கார வேண்டும். இதனால் அழுக்குகளானது சருமத்துளைகளில் இருந்து வெளியேறும் அளவில் இருக்கும். எனவே ஸ்டீம் செய்தவுடன், நன்கு தேய்த்து குளித்தால், எளிதில் முதுகில் இருக்கும் அழுக்கானது வெளியேறிவிடும். முதுகில் பருக்கள் இருந்தால், அப்போது பருக்களை போக்கும் சோப்புக்களை போட்டோ அல்லது பாடி வாஷ் பயன்படுத்தியோ குளிக்க வேண்டும்.
* உடலில் இருந்து அழுக்குகளைப் போக்க ஸ்கரப் மிகவும் முக்கியமான ஒன்று. இதற்கு கடைகளில் விற்கும் உடலில் உள்ள அழுக்கை நீக்க பயன்படுத்தும் நார் சிறந்ததாக இருக்கும். இவற்றை பயன்படுத்தி குளித்தால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
* முதுகின் அழகை கரும்புள்ளிகளும் கெடுக்கும். எனவே அத்தகைய கரும்புள்ளிகளை நீக்க கன்சீலரைப் பயன்படுத்தலாம். கன்சீலர் என்பது ஒரு வகையான அழகுப் பொருள் தான். இந்த பொருள் எத்தகைய கரும்புள்ளிகளையும் மறைத்துவிடும்.
* அழகான முதுகு வேண்டுமெனில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் பாதாம், ஆலிவ் அல்லது லாவண்டர் போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். முக்கியமாக குளிர்காலத்தில் அதிகபடியான வறட்சி ஏற்படும். எனவே அடிக்கடி இந்த மாதிரி மசாஜ் செய்தால், வறட்சியைத் தடுத்து, முதுகை பொலிவோடும், ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள முடியும்.
இவையே முதுகை அழகாக வைத்துக் கொள்வதற்கான டிப்ஸ். நீங்கள் வேறு ஏதாவது முறையை பின்பற்றி முதுகை அழகுப் படுத்தியிருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
