Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
முகப்பரு அழகை கெடுக்குதா? ஈஸியா வீட்டிலேயே போக்கலாம்!!!
முகத்தின் அழகை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் என்று பல உள்ளன. இவை அனைத்தும் வருவதற்கு காரணம் நமது செயல்களே ஆகும். எப்படியெனில் நாம் அழகாக இருக்க வேண்டுமென்று, கடைகளில் விற்கும் கண்ட கண்ட க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்திவிடுகிறோம். க்ரீம்களால் எப்படி ஏற்படும் என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் அந்த க்ரீம்களும் பருக்கள் உண்டாவதற்கு ஒரு காரணம். ஏனெனில் அந்த க்ரீம்களில் கெமிக்கல் பல கலந்திருக்கும். இதனால் அந்த கெமிக்கல்கள் சருமத்தின் செல்களை பாதித்துவிடும்.
குறிப்பாக இந்த பிரச்சனை இளம் வயதுள்ளோருக்கு தான் ஏற்படும். அது ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, இருவருமே இந்த பிரச்சனைக்கு ஆளாவார்கள். இதற்கு ஹார்மோன்களின் மாறுபாடும் ஒருவிதக் காரணம். எனவே அவ்வாறு முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் பிம்பிள் வந்தால், அப்போது அதனைப் போக்க வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்தே நீக்கலாம். இப்போது அது என்ன பொருட்கள், எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று பார்ப்போமா!!!

ஆப்பிள்
இந்த முறையில் ஆப்பிளை துருவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய ஆப்பிள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் தூள்
மஞ்சள் தூளுடன் சிறிது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் பிம்பிள் உள்ள இடங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், பருக்கள் போவதோடு, அதில் உள்ள கிருமிகளும் அழிந்துவிடும்.

பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு வேக வைத்து, பின் குளிர்ந்ததும், அதில் 12 பாதாமை அரைத்துப் போட்டு, சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகம் நன்கு பொலிவோடு, பருக்கள் இல்லாமல் இருக்கும்.

பப்பாளி
பப்பாளியின் சாற்றை முகத்தில் தினமும் தடவி, காய வைத்து கழுவி வந்தால், பிம்பிளைத் தடுக்கலாம்.

புதினா
புதினாவை அரைத்து, அதன் சாற்றை வடித்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன், அழகாகக் காணப்படும்.

தேன்
தேனை நேரடியாக முகத்தில் தடவினாலும், பருக்களை குறைக்க முடியும். இதனால் மருத்துவ குணம் வாய்ந்த தேன், சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை தடுத்து, சருமத்தை பாதுகாக்கும்.

வேப்பிலை
வேப்பிலையின் இலையை அரைத்து, அதினை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அதில் உள்ள காயங்களை குணப்படுத்தும் தன்மையானது, சருமத்தில் ஏற்படும் இதர பிரச்சனைகளையும் தடுத்துவிடும்.



Click it and Unblock the Notifications