Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
சில தவறான அழகுக்குறிப்புகள் பற்றிய உண்மைகள்!!!
பெண்களுக்கு தேவையான அழகுக்குறிப்புகள் ஏராளம் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றில் சில சமயம் தவறான கருத்துகளும் அதிகம் கூறப்படுகின்றன. எதெல்லாம் சரி? எதெல்லாம் தவறு? என்ற சில அடிப்படை விஷயங்களை முதலில் புரிந்து கொண்டால் தான், அழகை பாதுகாத்து மேம்படுத்த முடியும்.
தற்போதைய பரபரப்பு யுகத்தில் அற்பமான விஷயங்கள் கூட பெரிதுபடுத்தப்பட்டு அழகுக்குறிப்புகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே எந்தெந்த விஷயங்களில் தவறான கருத்துகள் நீடித்து வருகின்றன என்பதை பார்ப்போம். நீங்கள் கூட ஆரம்பத்தில் அந்த விஷயங்களை உண்மை என்றே நம்பியிருக்கக்கூடும்!.

ஒரு நரை முடியைப் பிடுங்கினால் அதிகம் நரை விழும்!
இருப்பதிலேயே அபத்தமான நம்பிக்கை இதுதான். ஒரே ஒரு நரை முடி தனித்து இருப்பதை பிடுங்கக்கூடாது என்பதும், பிடுங்கினால் பல புதிய நரைகள் தோன்றும் என்பதும். அறிவியல்பூர்வமாக இது ஒரு தவறான கருத்தாகும். நமது தலையின் சரும பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தான் ஃபோலிக்கிள் எனப்படும் ரோம வேர்கள் உள்ளன. நீங்கள் நரை முடியை பிடுங்குவதால் புதிய நரை தோன்றப் போவதில்லை. எது எப்படி இருப்பினும், வயதால் அல்லது பரம்பரையால் முடியானது தானாக நரைக்கவே செய்யும்.

ரேசர் மூலம் முடியை நீக்கினால் அது தடிமனாக முளைக்கும்!
ஒரு முடியின் தடிமன் என்பது தோலுக்கு அடியில் உள்ள ஃபோலிக்கிள் முனையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ரேசர் அந்த ஆழம் வரை செல்ல முடியாது என்பதால் முடியின் தடிமனில் மாற்றம் நிகழ்வதில்லை. இருப்பினும் ஷேவிங்கின் போது முடி சாய்வாக வெட்டப்படுவதால், ஷேவ் செய்து சில நாட்கள் கழித்து காணப்படும் புதிய முடி தடிமனாக இருப்பது போல் காட்சியளிக்கிறது. இது ஒரு மாயை அன்றி வேறில்லை.

எண்ணெய் பசை சருமத்திற்கு மாய்ச்சுரைசர் தேவையில்லை
பொதுவாக எண்ணெய்ச் சுரப்பிகளானது சருமம் மற்றும் ரோமங்களை மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகின்றன. ஆனாலும் சில சமயம் இந்த எண்ணெய் சுரப்பிகள் சருமத் துவாரங்களில் அடைத்து கொண்டு விடலாம். இந்த அடைப்புகளை மாய்ச்சுரைசர் மூலம் தான் நீக்க முடியும். மேலும் தற்போது இதற்கென எண்ணெய் இல்லாத மாய்ச்சுரைசர் வகைகள் கிடைக்கின்றன.

டூ இன் ஒன் ஷாம்பு - கண்டிஷனர் தயாரிப்புகள்
ஷாம்புவின் வேலை வேறு, கண்டிஷனரின் வேலை வேறு. முதலாவது முடியை கழுவப் பயன்படுவது, இரண்டாவது முடியை மென்மையாக்க பயன்படுவது. இவை இரண்டையுமே ஒரே திரவமாக தர முடியாது. எனவே டூ இன் ஒன் ஷாம்பு - கண்டிஷனர் தயாரிப்புகள் அனைத்துமே மார்க்கெட்டிங் உத்திகள் தான் என்று கூறலாம். மேலும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தனித்தனியாக பயன்படுத்துவது மட்டுமே உரிய பலனை கொடுக்கும்.

மீன் உணவோடு பால் பொருட்களை சாப்பிட்டால் சருமத்தில் வெண்படலங்கள் தோன்றும்!
சருமத்தில் உள்ள மெலனின் எனும் நிறமி செல்கள் அழிவதால் தான் வெண்படலங்கள் தோன்றுகின்றன. இந்த குறைபாட்டுக்கு ‘விடிலிகோ' என்று பெயர். இதற்கும் மீன் உணவை பால் உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.



Click it and Unblock the Notifications