Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
சருமத்தோட நிறம் பழுப்பு நிறத்துல மாறியிருக்கா? ஈஸியா நீக்கலாம்!!!
சருமத்தில் சூரிய வெப்பம் அதிகமாகப் படுவதால், சருமத்தின் நிறம் மாறுகிறது. சொல்லப்போனால் பளிச்சென்று இருந்த சருமம் சற்று மங்கலான நிறத்தில் மாறிவிடுகிறது. அதிலும் முகம், கழுத்து, முழங்கை போன்ற பகுதிகளிலேயே அதிக மாற்றங்கள் தெரிகின்றன. ஆகவே அத்தகைய அழகான சருமத்தின் நிறம் மாறாமல் இருப்பதற்கு, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்திருக்கும் அழகுப் பொருட்களை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தினால், சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, சருமமும் நன்கு அழகோடு மின்னும். இப்போது அந்த இயற்கைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை சாறு
எலுமிச்சை நிறைய நன்மைகளை அடக்கியுள்ளது. ஆகவே அத்தகைய எலுமிச்சை சாற்றுடன் சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காய் சாற்றை விட்டு, கலந்து, 10-15 நிமிடம் முகத்திற்கு தடவி, பின் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறத்தை நீக்குவதோடு, ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

மஞ்சள்
தினமும் குளிக்கும் முன் மஞ்சள் தூளை குளிர்ச்சியான தயிரோடு சேர்த்து கலந்து, முகம், கழுத்து மற்றும் முழங்கைக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். ஆகவே சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறம் விரைவில் போய்விடும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நன்கு அரைத்து பேஸ்ட் போன்று செய்து, சிறிமுது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, நிறம் மாறியுள்ள இடத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து, பிறகு கழுவ வேண்டும்.

ஸ்கரப்
சருமத்தை அழகாக எந்த ஒரு பக்கவிளைவுமின்றி அழகாக்க, ஸ்கரப் செய்வது சிறந்தது. அதிலும் அவ்வாறு பயன்படுத்தும் போது செயற்கைப் பொருட்களுக்கு பதிலாக இயற்கைப் பொருட்களான சர்க்கரை அல்லது ஆலிவ் எண்ணெய் வைத்து ஸ்கரப் செய்தால், சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கிவிடும்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லுடன் சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ், அரை டீஸ்பூன் தேன் மற்றும் தயிரை சேர்த்து, நிறம் மாறியுள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் உடனே அதற்கான பலன் தெரிந்துவிடும். மேலும் பாதிக்கப்பட்ட இடமும் சரியாகிவிடும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை பேஸ்ட் போல் செய்து, சருமத்தின் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வந்தால், அந்த பேக்கிங் சோடா பழுப்பு நிறத்தை போக்கிவிடும்.

தேங்காய் தண்ணீர்
தேங்காயை உடைத்தால், அதன் உள்ளே இருக்கும் நீரை சருமத்தில் தடவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள சூரிய கதிர்களின் வீச்சுகளால் ஏற்பட்ட பழுப்பு நிறம் மாறி, சருமம் மென்மையாக இருக்கும்.

பாதாம்
சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறத்தை பாதாம் மற்றும் சந்தனக்கட்டையின் பேஸ்ட் எளிதில் நீக்கிவிடும். அதிலும் சந்தனம் சாதாரணமாகவே சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்துவிடும்.

தக்காளி ஜூஸ்
தக்காளி உடலுக்கு மட்டும் சிறந்தது அல்ல, அழகூட்டும் ஒரு அழகுப் பொருளும் கூட. அதிலும் அந்த தக்காளி ஜூஸை சருமத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் பட்டுப் போன்று இருக்கும்.

ஓட்ஸ்
ஓட்ஸ் உடன் சிறிது பச்சை பால், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, காய வைக்க வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
