Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
அழகான சருமத்தை பெற அழகான டிப்ஸ்...

* முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். மேலும் வெளியே செல்வதற்கு முன்பும், வீட்டிற்கு வந்த பின்பும் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து கழுவிட வேண்டும். இவற்றால் சரும துளைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறிவிடும். அதிலும் பாடி ஜெல் மற்றும் சோப்புகளை பயன்படுத்தினால், சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, முகப்பருக்கள் வந்துவிடும். ஆகவே குளிக்கும் போது தவிர, மற்ற நேரங்களில் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
* முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். அதிலும் அந்த துணியை சூடான நீரில் நனைத்து பிளிந்து, பின் துடைக்க வேண்டும். மேலும் அவ்வாறு செய்யும் போது, அந்த துணியை நீரில் நனைத்து பிளிந்ததும் முகத்தில் வைத்து, ஒரு நிமிடம் வைக்க வேண்டும். இதனால் முகத்திற்கு ஒரு சிறிய ஸ்டீம் செய்தது போல் இருக்கும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், 2 நாட்களில் சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். முக்கியமாக முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீர் தான் சிறந்தது, அப்போது சூடான நீரை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அழுக்குகள் சருமத்திலேயே தங்கிவிடும்.
* கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கைகளை கழுவாமல் எப்போதும் முகத்தை தொடக்கூடாது. ஏனெனில் கைகளில் எப்போதும் கிருமிகள், பாக்டீரியாக்கள் இருக்கும். ஆகவே சுத்தம் மிகவும் முக்கியம்.
* சருமம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க, வாரத்திற்கு ஒரு முறையாவது சருமத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் சர்க்கரை ஸ்கரப் மிகவும் சிறந்தது. அதற்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சிறிது நீரை ஊற்றி, நன்கு கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
* எலுமிச்சையும் ஒருவித அழகுப் பொருள். அதிலும் முகத்தில் முகப்பரு அல்லது பிம்பிள் இருந்தால், அவற்றை நீக்குவதற்கு சிறிய எலுமிச்சைத் துணடை எடுத்துக் கொண்டு, முகத்தில் தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். மேலும் எலுமிச்சை சருமத்திற்கு வறட்சியைத் தரும். ஆகவே இதனை செய்த பின், எலுமிச்சையால் ஆன மாய்ஸ்சுரைசரை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், சருமம் நன்கு பொலிவோடு, பட்டுப் போன்று, சுத்தமாக காணப்படும்.



Click it and Unblock the Notifications
