Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முகப்பருவை போக்கும் வெட்டிவேர் சிகிச்சை

வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.
பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
கோடை காலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாசனையான பேக் போடலாம். வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.
வெட்டிவேர் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.
தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம் சேர்த்து இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். கூந்தல் வாசனையாக இருக்கும். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்திற்கு எல்லோருமே மயங்குவார்கள்.
சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். பச்சைப்பயறு - 100 கிராம் சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - 50 கிராம் சேர்த்து நன்றாக அரைத்து பவுடாக்கவும். இதனை குளிக்கும் போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் இந்த பவுடரை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.



Click it and Unblock the Notifications
