Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
சருமத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் டைமண்ட் பேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா?
Diamond Facial: பெண்கள் என்றாலே அழகு தான். அதிலும் அழகை விரும்பாத பெண்கள் என்று யாரையும் சொல்லி விட முடியாது. அழகிற்கு அழகு சேர்க்கும் படிய அழகு நிலையம் செல்வது, வீட்டிலேயே சில அழகு குறிப்புகளை செய்வது என்று சிலவற்றை செய்வார்கள். அழகு நிலையத்தில் பெரும்பாலும் பெண்களால் விரும்பப்படுவதும் விலையும் அதிகமாக இருக்க கூடியது டைமண்ட் பேசியல். இதை எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்று அழகுக்கலை நிபுணர் மீனா நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

கிளென்சிங்
தேவையான பொருட்கள்:
பால் - 2 ஸ்பூன்
பஞ்சு - சிறிதளவு
செய்முறை:
நீங்கள் தினசரி உபயோகிக்கும் ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பை கொண்டு நன்றாக முகத்தை கழுவி கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கு முன்பு முகத்தை கழுவி இருந்தாலும் மீண்டும் நன்றாக கழுவி கொள்ளுங்கள். பின் பச்சை பால் அல்லது காய்ச்சி ஆற வைத்த பாலை எடுத்து, பஞ்சை அந்த பாலில் நனைத்து நன்றாக தேய்க்கவும். மூக்கின் மீது இருக்கும் கரும்புள்ளிகள், கண்களின் அடிப்பகுதி, மற்றும் நிறம் மாறி இருக்கும் இடங்களில் நன்கு தேய்க்கவும். பால் முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள், மற்றும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் அல்லது கோதுமை மாவு - 2 ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன் (வறண்ட சருமத்திற்கு)
அல்லது
ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன் (சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்திற்கு)
செய்முறை:
ஓட்ஸ் அல்லது கோதுமை மாவுடன், சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்தினர் ரோஸ் வாட்டரும், வறண்ட சருமத்தினர் பாலும் கலந்து முகத்தில் நன்கு தேய்த்து விடவும். இந்த கலவை நன்கு கலந்து மிருதுவாக மாறும் முன், சிறிது சுரசுரப்பாக இருக்கும் போதே பயன்படுத்திவிடவும். பின் முகத்தை குளிர்ந்த நீரினாலோ அல்லது நீரில் நனைந்த துண்டை கொண்டோ துடைத்து விடவும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கவும், நிறத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.
மசாஜ்
தேவையான பொருட்கள்:
தயிர் - 3 ஸ்பூன்
பீட்ரூட் சாறு - 3 ஸ்பூன்
செய்முறை:
தயிரை துணியில் கட்டி அதில் இருக்கும் நீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நன்றாக அரைத்து வடிகட்டிய பீட்ரூட் சாறை கலந்து, முகத்தில் 15-20 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, உங்கள் முகத்தை பிரகாசமாக்குகிறது.
பேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
சந்தனப்பொடி அல்லது கோதுமை மாவு - 2 ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன் (வறண்ட சருமத்திற்கு)
அல்லது
ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன் (சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்திற்கு)
சந்தனப்பொடி அல்லது கோதுமை மாவுடன், சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்தினர் ரோஸ் வாட்டரும், வறண்ட சருமத்தினர் பாலும் கலந்து முகத்தில் நன்கு பூசி நன்கு உலர விடவும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். பின் சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது பாதம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை தேய்க்கவும்.



Click it and Unblock the Notifications

