Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
பொலிவிழந்து டல்லாக இருக்கும் முகத்தை பிரகாசமாக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், ஒருவரது ஆரோக்கியம் மட்டுமின்றி, அழகும் பாதிக்கப்படுகிறது. அதுவும் அழகை எடுத்துக் கொண்டால், மாசடைந்த காற்றில் உள்ள நச்சுக்கள் சருமத் துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்துவதோடு, இறந்த செல்களை அதிகம் தேங்க வைத்து, முகத்தை பொலிவிழந்து டல்லாக காட்டுகிறது.
அதேப் போல் மன அழுத்தத்தினால், சரியான தூக்கம் கிடைக்கப் பெறாமல் முகம் எப்போதும் சோர்வாக காணப்படுகிறது. இப்படி பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமானால், ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரியும்.

அதுவும் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக்குகள் போடலாம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும். கீழே முகப்பொலிவை மேம்படுத்தும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மஞ்சள் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடல் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. அரிசி நீர் மாஸ்க்
* சாதம் வடித்த நீரில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எனவே சாதம் வடித்த நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பஞ்சுருண்டையை எடுத்து, நீரில் நனைத்து, அதைக் கொண்டு முகத்தில் தடவி 15-20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. மைசூர் தால் ஃபேஸ் பேக்
* மைசூர் பருப்பை நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த பொடியை ஒரு கிண்ணத்தில் சிறிது எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
4. தேன் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது மஞ்சள் தூள் அல்லது பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பஞ்சுருண்டையை பயன்படுத்தி, அதை முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. தக்காளி ஃபேஸ் பேக்
* முதலில் தக்காளியை எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications
