Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
முகத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றி, அழகை கூட்டணுமா? அப்ப இந்த மாஸ்க்கை நைட் டைம்-ல போடுங்க...
Skin Care Tips In Tamil: தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழலால் சருமத் துளைகளில் அழுக்குகள் அதிகம் சேர்கின்றன. இப்படி சேரும் அழுக்குகளை வெளியேற்றாமல் இருந்தால், அது சருமத்தை கருமையாக வெளிக்காட்டுவதோடு, சருமத்தை பொலிவற்றதாக வெளிக்காட்டும்.
மேலும் சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் சேரும் போது, அதன் விளைவாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பலவிதமான சரும பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஏராளமான மாஸ்க்குகள் கடைகளில் விற்கப்படுகின்றன.

அவை அனைத்திலும் கெமிக்கல்கள் இருப்பதால், அனைவருக்குமே அது சிறந்த பலனைத் தராது. ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே சருமத்துளைகளில் உள்ள அழுக்கை வெளியேற்றும் மாஸ்க்குகளை தயாரிக்கலாம். இப்போது சருமத் துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்கை வெளியேற்ற உதவும் சில நேச்சுரல் பீல்-ஆஃப் மாஸ்க்குகளைக் காண்போம்.
1. ஆக்டிவேட்டட் சார்கோல் மற்றும் ஜெலட்டின் மாஸ்க்
* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் ஆக்டிவேட்டட் சார்கோல், 1/2 டீஸ்பூன் ஜெலட்டின் மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் பிரஷ் பயன்படுத்தி தடவ வேண்டும். அப்படி தடவும் போது கண்கள் மற்றும் புருவங்களுக்கு அருகில் தடவிவிட வேண்டாம்.
* பின்பு நன்கு காய வைக்க வேண்டும். பின் மீண்டும் அதை தடவி உலர வைக்க வேண்டும்.
* அதன் பின் கீழிருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும்.
* இந்த மாஸ்க்கைப் போடுவதன் மூலம், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள், இறந்த செல்கள் நீங்குவதோடு, சரும சுருக்கங்கள் மற்றும் முதுமை கோடுகளும் குறையும்.
2. பால் மற்றும் தேன்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்க வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். காய்ந்ததும், மீண்டும் ஒருமுறை அந்த கலவையைத் தடவ வேண்டும்.
* பின்பு காட்டன் ஸ்ட்ரிப்புகளை முகத்தில் விரித்து, 20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்ததும், மேல் நோக்கி ஸ்ட்ரிப்புகளை உரித்து எடுக்க வேண்டும்.
* இந்த மாஸ்க் சருமத்தில் உள்ள அழுக்கை முழுமையாக வெளியேற்றி, சரும பொலிவை அதிகரிப்பதோடு, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.
3. ஆரஞ்சு மற்றும் ஜெலட்டின்
* ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் ஜெலட்டினை எடுத்து, அதில் ஆரஞ்சு ஜூஸை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து, ஜெலட்டின் கரையும் வரை சூடேற்றி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் பிரஷ் பயன்படுத்தி தடவி காய வைக்க வேண்டும். பின் மீண்டும் ஒருமுறை தடவி, காய வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்ததும், மேல் நோக்கி மாஸ்க்கை உரித்து எடுக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம், சருமத்திற்கு உடனடி பொலிவு கிடைப்கதோடு, சருமம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதோடு, சருமத்ல் ஆரோக்கியமான சரும செல்களை ஊக்குவித்து, முதுமை தோற்றத்தைக் குறைக்கும்.



Click it and Unblock the Notifications