Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
உங்க முகம் கருப்பா டல்லா இருக்கா? அப்ப நைட் தூங்கும் முன் இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை போடுங்க..
Skin Care Tips In Tamil: அனைவருமே அழகான மற்றும் பொலிவான சருமத்தை பெற விரும்புவோம். ஆனால் அனைவருக்குமே இந்த மாதிரியான சருமம் கிடைப்பதில்லை. அதுவும் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, அதன் காரணமாக முகம் பொலிவிழந்து கருப்பாக காணப்படும்.
உங்கள் முகம் இப்படி காணப்படுகிறதா? உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க விரும்புகிறீர்களா? ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்த விருப்பம் இல்லையா? அப்படியானால், வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுங்கள்.

அதுவும் அந்த ஃபேஸ் பேக்குகளை இரவு தூங்குவதற்கு முன் போடுங்கள். இதனால் ஃபேஸ் பேக்கில் உள்ள சத்துக்கள் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு, முகம் நன்கு பொலிவோடும், பளிச்சென்றும் காணப்படும். இப்போது சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இரவு நேரத்தில் எந்த மாதிரியான ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடலாம் என்பதைக் காண்போம்.
கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ மாஸ்க்
கற்றாழையில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நொதிகள் சருமத்தில் பல்வேறு மாயங்களை செய்யக்கூடியது. அப்படிப்பட்ட கற்றாழையுடன் வைட்டமின் ஈ ஆயிலை சேர்த்து சருமத்தில் பயன்படுத்தும் போது, சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும் மற்றும் சருமம் நீரேற்றத்துடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அதற்கு வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுத்து, அதில் துளையிட்டு அதனுள் உள்ள எண்ணெயை ஒரு பௌலில் பிழிந்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
உங்கள் சருமம் வறண்ட சருமம் என்றால், ஓட்ஸ் மற்றும் தேன் கொண்டு ஃபேஸ் பேக்கை போடலாம். அதுவும் ஓட்ஸ் பொடியை பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுவதோடு, சரும வறட்சியைத் தடுக்கிறது. அதேப் போல் தேன் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர் மற்றும் இது சருமத்திற்கு ஊட்டமளித்து, சருமத்தை பொலிவோடு வெளிக்காட்டும்.
அதற்கு ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியை எடுத்து, தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கைகளை நீரில் நனைத்து, முகத்தை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரைப் பயன்படுத்திக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமம் நன்கு பளிச்சென்று பிரகாசமாக காட்சியளிக்கும்.
பாதாம் மற்றும் பால் ஃபேஸ் மாஸ்க்
பாதாம், பால் ஆகிய இரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களைக் கொண்டுள்ளன. உங்கள் முகம் மென்மையிழந்து இருப்பதை உணர்ந்தால், உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகம் நிறைந்த ஃபேஸ் பேக்கை போட வேண்டும்.
இவ்விரண்டுமே பாதாம் மற்றும் பால் ஃபேஸ் பேக்கில் உள்ளன. அதற்கு 5 பாதாமை இரவு தூங்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதன் தோலுரித்து, அரைத்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்
வெள்ளரிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குளிர்ச்சி பண்புகள் உள்ளன. இப்படிப்பட்ட வெள்ளரிக்காயைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடும் போது, அது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதோடு, சருமத்தில் உள்ள காயங்களையும் ஆற்றும்.
அதுவும் வெள்ளரிக்காயை அரைத்து, அதன் சாற்றினை தினமும் இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும்.
மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் மாஸ்க்
மஞ்சள் பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கும் திறன் கொண்டது. சொல்லப்போனால் பழங்காலம் முதலாக சரும அழகை மேம்படுத்த மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அது சருமத்தில் உள்ள பருக்கள், கருவளையங்கள் மற்றும் சரும சுருக்கம் போன்றவை தடுக்கப்பட்டு, சரும அழகும், ஆரோக்கியமும் மேம்படும். அதற்கு இரவு தூங்கும் முன் ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications