Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க மூக்கு மேல கருப்பா சொரசொரன்னு இருக்கா? அப்ப தினமும் நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
Skin Care Tips In Tamil: உங்கள் மூக்கின் மேல் பகுதி மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதி சொரசொரவென்று உள்ளதா? கண்ணாடியில் உங்கள் மூக்கைப் பார்த்தால் மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருப்பதை காண்கிறீர்களா? அப்படியானால் உங்கள் சருமத்துளைகளில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அதிகம் நிரம்பியுள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் சருமத்துளைகளில் உள்ள அழுக்கையும், இறந்த செல்களையும் எப்படி நீக்குவது என்று பலரும் யோசிக்கலாம்.
நிறைய பேர் இந்த கரும்புள்ளிகளை நீக்க கடைகளில் விற்கப்படும் பல கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. அப்படியே கிடைத்தாலும், அது தற்காலிகமானதாக இருக்கும். அதோடு கெமிக்கல் கலந்த பொருட்கள் சிலருக்கு சருமத்தில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

அதுவே வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இந்த கரும்புள்ளிகளைப் போக்க முயற்சித்தால், குறைவான செலவில் கரும்புள்ளிகளைப் போக்கலாம் மற்றும் சருமத்திற்கு பாதுகாப்பானதும் கூட. கீழே கரும்புள்ளிகளைப் போக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளை ஒருவர் தினமும் இரவு தூங்கும் முன் பயன்படுத்தினால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் சுத்தமாக பளிச்சென்று மென்மையாக இருக்கும்.
1. பட்டை ஃபேஸ் பேக்
* முதலில் ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவ வேண்டும்.
* அதன் பின் மேலே ஒரு காட்டன் ஸ்ட்ரிப்பை வைத்து, மென்மையாக அழுத்த வேண்டும்.
* பின்பு 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த காட்டன் ஸ்ட்ரிப்பை நீக்க வேண்டும்.
* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. முட்டை ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும். அதன்பின் இரண்டாவதாக மீண்டும் வெள்ளைக்கருவை தடவ வேண்டும். அது காய்ந்த பின் மூன்றாவது முறையாக தடவி அதையும் காய வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* விருப்பமிருந்தால், அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சருமம் பட்டுப்போன்று இருக்கும்.
3. க்ரீன் டீ ஃபேஸ் பேக்
* முதலில் க்ரீன் டீ இலைகள் அல்லது க்ரீன் டீ பேக்கை சுடுநீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்த நீரை பஞ்சுருண்டையில் நனைத்து, முகம் முழுவதும் தடவுவதோடு, அந்த பஞ்சுருண்டையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகமும் பிரகாசமாக இருக்கும்.
4. ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் முழுவதும் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கைகளை நனைத்து, மென்மையாக முகத்தை ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டு வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.
5. தக்காளி ஃபேஸ் பேக்
* தக்காளி ஃபேஸ் பேக்கிற்கு முதலில் நன்கு கனிந்த தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த தக்காளியை முகம் முழுவதும் தடவி, மென்மையாக 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தக்காளியைக் கொண்டு அவ்வப்போது ஃபேஸ் பேக் போட்டு வர முகம் ஜொலிக்கும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
கரும்புள்ளிகளைப் போக்க முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுவதற்கு முன், சுடுநீரில் ஆவி பிடித்துவிட்டு, பின் ஃபேஸ் பேக் போடுங்கள். இதனால் சருமத்துளைகள் தளர்ந்து கரும்புள்ளிகள் மென்மையாகி எளிதில் வெளியேறும்.



Click it and Unblock the Notifications