Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மழைக்காலத்தில் பார்லர் போகாமலேயே அழகா ஜொலிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க...
Skin Care Tips In Tamil: மழைக்காலம் வந்துவிட்டாலே சோம்பேறித்தனம் அதிகரித்துவிடும். சோம்பேறித்தனம் அதிகரித்தால், தினசரி செய்யும் சில வேலைகளை கூட சிலர் தள்ளிப் போடுவார்கள். முக்கியமாக தினமும் சருமத்திற்கு கொடுக்கும் சில பராமரிப்புக்களைக் கூட பலர் தவிர்ப்பதுண்டு.
நிறைய பேர் மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமாக இருப்பதால், சரும வறட்சி போன்ற எவ்வித சரும பிரச்சனைகளும் வராது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மற்ற பருவ காலங்களைப் போலவே மழைக்காலத்திலும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் சரியான பராமரிப்புக்களை தவறாமல் மேற்கொண்டு வந்தால், அவற்றைத் தவிர்க்கவாம்.

அதுவும் சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுக்க பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டு சமையலறையில் உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க்குகளை போட்டு வந்தாலே போதும். கீழே மழைக்காலத்திலும் அழகாக ஜொலிக்க போட வேண்டிய சில ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஃபேஸ் மாஸ்க்குகளை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமம் எப்போதும் அழகாகவும், வெள்ளையாகவும், பிரச்சனைகளின்றியும் இருக்கும்.
1. ஓட்ஸ் + முட்டை மாஸ்க்
* ஒரு பௌலில் 3 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1 முட்டையின் வெள்ளைக்கரு, 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
2. ஓட்ஸ் மற்றும் ரோஸ்வாட்டர் மாஸ்க்
* ஒரு பௌலில் 3 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
3. முல்தானி மெட்டி ஃபேஸ் மாஸ்க்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். ஆனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அது சரும வறட்சியை இன்னும் அதிகரிக்கும்.
4. கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1-2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை சென்சிடிவ் சருமத்தினரைத் தவிர, மற்ற அனைத்து வகையினரும் பயன்படுத்தலாம்.
5. பழ ஃபேஸ் மாஸ்க்
* ஒரு பௌலில் 1 இன்ச் துண்டு வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் பீச் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 ஸ்ட்ராபெர்ரி மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications