Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழிந்து கருப்பா தெரியுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: உங்களுக்கு இருப்பது எண்ணெய் பசை சருமமா? இப்படி எண்ணெய் பசை சருமம் இருப்பதனால் உங்கள் முகம் எப்போதும் பிசுபிசுப்பாகவும், கருப்பாகவும் தெரிகிறதா? அதோடு பருக்களும் அதிகமாக வருகிறதா? இப்படி முகத்தில் வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்படியானால் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி பயன்படுத்துங்கள்.
அதுவும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, முகத்தில் வழியும் எண்ணெய் பசை கட்டுப்படுவது மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். அதோடு பணமும் மிச்சமாகும்.

அப்படி முகத்தில் அதிகமாக வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தவும், அகற்றவும் உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் மைசூர் பருப்பு என்று அழைக்கப்படும் மசூர் பருப்பு. இந்த பருப்பைக் கொண்டு ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுவதன் மூலம், முகம் பளிச்சென்று இருக்கும். இப்போது எண்ணெய் பசை சருமத்தினருக்கான சில மைசூர் பருப்பு ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. மைசூர் பருப்பு மற்றும் ரோஸ் வாட்டர் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் அதை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
2. மைசூர் பருப்பு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஊற வைத்த மைசூர் பருப்பை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக கண்களைச் சுற்றி தடவும் போது கவனமாக தடவுங்கள்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.
3. மைசூர் பருப்பு, தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு மைசூர் பருப்பு பேஸ்ட்டுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி, சருமத்தை உலர்த்திய பின், மறக்காமல் லைட் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
4. மைசூர் பருப்பு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஊற வைத்த மைசூர் பருப்பை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.
5. மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஊற வைத்த மைசூர் பருப்பை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications