Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
உங்களுக்கு முகப்பரு அதிகமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் முகுப்பரு. இந்த முகப்பரு ஒருவரது முக அழகைக் கெடுப்பது மட்டுமின்றி, சில சமயங்களில் மிகுந்த வலியையும் உண்டாக்கும். பெரும்பாலும் முகப்பருவானது எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் வரும்.
ஏனெனில் சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் போது, அழுக்குகள் அதிகம் தேங்கி, சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தி, பருக்களை வரவழைக்கும். இப்படிப்பட்ட பருக்கள் வந்தால், பலரும் அதை விரைவில் போக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த பொருட்கள் நல்ல பலனைத் தருமா என்றால், அது தான் இல்லை.

இந்நிலையில் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுத்தால், பருக்கள் குறைவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது முகத்தில் உள்ள பருக்களைக் குறைக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. தேன் மற்றும் பட்டை மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் பட்டை தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.
2. க்ரீன் டீ மற்றும் கற்றாழை மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு க்ரீன் டீயுடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.
3. மஞ்சள் மற்றும் தயிர் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
4. ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
5. சாம்பல் பவுடர் மற்றும் கற்றாழை மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் ஆக்டிவேட்டட் சாம்பல் பவுடரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை 10 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.
6. பப்பாளி மற்றும் தேன் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.
7. ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.
8. வேப்பிலை மற்றும் மஞ்சள் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பவுடரை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை 10 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
9. ஸ்ட்ராபெர்ரி மற்றும் தயிர் மாஸ்க்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த 2 ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்து மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
10. வெள்ளரிக்காய் மற்றும் புதினா மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு வெள்ளரிக்காயை எடுத்து, அத்துடன் புதினா இலைகளை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











