Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சனி பகவான்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
பெண்களே! உதட்டிற்கு மேல் அசிங்கமா முடி வளருதா? இதோ அதை தடுக்கும் சில வழிகள்!
Skin Care Tips In Tamil: ஆண்களுக்கு மீசை தான் அழகு. ஆனால் அந்த மீசை பெண்களுக்கு வந்தால், அதுவே அசிங்கமான தோற்றத்தைத் தரும் அல்லவா? ஆனால் நிறைய பெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
பெண்களுக்கு ஆண்களைப் போன்றே மீசை வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அதிகமாக இருப்பது தான். பல பெண்கள் தங்கள் உதட்டிற்கு மேலே வளரும் முடியை நீக்க வேக்சிங், த்ரெட்டிங் செய்வார்கள்.

ஆனால் எவ்வளவு காலம் இப்படி செய்து கொண்டிருக்க முடியும். ஆனால் உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியைக் குறைக்கலாம். அதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றி வந்தால், உதட்டிற்கு மேல் அசிங்கமாக வளரும் முடியின் அடர்த்தி குறைவதோடு, வளர்ச்சியும் குறையும். இப்போது அந்த வழிகள் எவையென்பதைக் காண்போம்.
மஞ்சள் மற்றும் பால்
பழங்காலம் முதலாக மஞ்சள் முகத்தில் முடியின் வளர்ச்சியைக் குறைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட மஞ்சளை ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், முடியின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.
சர்க்கரை மற்றும் எலுமிச்சை
வீட்டிலேயே வேக்சிங் செய்ய நினைத்தால், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, அந்த கலவையை ஒட்டும் பேஸ்ட் பதத்திற்கு சூடேற்ற வேண்டும். பின் அதை இறக்கி குளிர வைத்து, உதட்டிற்கு மேலே தடவி, பின்பு அதன் மேல் ஒரு வைத்து, மென்மையாக அழுத்த வேண்டும். பின் அதை முடி வளர்ச்சிக்கு எதிர் திசையை நோக்கி இழுக்க வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், ஒரு கட்டத்தில் மயிர்கால்கள் வலுவிழந்து, அதன் வளர்ச்சி குறைந்துவிடும்.
பப்பாளி மற்றும் மஞ்சள் மாஸ்க்
பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். அதுவும் பப்பாளி காயை சிறிது எடுத்து, அதை அரைத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால், முடி வளர்வது ஒரு கட்டத்தில் நின்றுவிடும்.
புதினா டீ
புதினா டீயை தொடர்ந்து குடித்து வந்தால், அது வேகமாக முடி வளர்வதைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் புதினாவில் ஆன்டி-ஆன்ட்ரோஜெனிக் பண்புகள் உள்ளன. இவை முடியின் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஹார்மோன்களின் அளசை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.
கடலை மாவு மாஸ்க்
முகத்தில் முடியின் வளர்ச்சியை அதிகம் கொண்டிருப்பவர்கள், குறிப்பாக உதட்டிற்கு மேல் முடியின் வளர்ச்சியை அதிகம் கொண்ட பெண்கள் கடலை மாவு மாஸ்க்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேல் தடவி நன்கு காய்ந்ததும், நீரில் நனைத்த கையால் மேல் நோக்கி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முடியின் வளர்ச்சி குறைவதோடு, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும்.



Click it and Unblock the Notifications
