Latest Updates
-
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கை, கால் கருப்பா அசிங்கமா இருக்கா? இத வாரம் 2 முறை யூஸ் பண்ணுங்க.. சீக்கிரம் வெள்ளையாயிடும்..!
Skin Care Tips In Tamil: அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பும் நாம் பெரும்பாலும் முகத்திற்கு மட்டுமே அதிக பராமரிப்புக்களை கொடுத்து வருகிறோம். ஒருவரது முகம் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? நிச்சயம் இல்லை.
முகம் நன்கு பளிச்சென்று பிரகாசமாக இருந்து, கை, கால்கள் கருகருவென்று இருந்தால் நன்றாக இருக்குமா? அதுவும் கோடை வெயிலில் அதிகம் சுற்றி நிறைய பேரின் கை, கால்கள் கருமையாகி இருக்கும்.

உங்களின் கை, கால்களும் இப்படி கருப்பாக உள்ளதா? அந்த கருமையைப் போக்கி, கை, கால்களை வெள்ளையாக்க விரும்புகிறீர்களா? அதுவும் இயற்கை வழிகளில் கை, கால்களை வெள்ளையாக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்.
கடலை மாவு மற்றும் தயிர் மாஸ்க்
தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும். லாக்டிக் அமிலமானது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுவதோடு, சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.
உங்கள் கை, கால்கள் கருப்பாக அசிங்கமாக இருந்தால், ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
காபித் தூள் மற்றும் தேன்
சரும கருமையைப் போக்கி, சரும நிறத்தை மேம்படுத்த வேண்டுமானால், சருமத்தை அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தின் மேல் பகுதியில் உள்ள மந்தமான லேயர் நீங்கும்.
மேலும் இது சருமத் துளைகள் அடைக்கப்படுவதைத் தடுத்து, சரும பொலிவை மேம்படுத்தும். அதற்கு காபி தூளை தேன் சேர்த்து கலந்து, அதை கை, கால்களில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
மஞ்சள் மற்றும் பால்
சமையலறையில் காணப்படும் மிகவும் பொதுவான பொருள் தான் மஞ்சள் தூள். இந்த மஞ்சள் தூள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைத்து, சருமம் கருமையாவதைத் தடுக்கிறது. அதற்கு சிறிது மஞ்சள் தூளை எடுத்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
குங்குமப்பூ, தயிர், கடலை மாவு பேக்
சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் மிகவும் சிறப்பான ஒரு பேக் தான் குங்குமப்பூ, தயிர், கடலை மாவு பேக். இதற்கு ஒரு பௌலில் சிறிது குங்குமப்பூ, கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
பின் மறுநாள் காலையில் அந்த கலவையை எடுத்து, கருமையாக உள்ள முகம், கை, கால்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சரும நிறம் மேம்படுவதை நன்கு காணலாம்.
நொதிக்க வைத்த அரிசி நீர்
அரிசி கழுவிய நீரில் சரும கருமையைப் போக்கி, சரும நிறத்தை மேம்படுத்தும் பொருள் உள்ளது. இந்நீரை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும நிறம் மேம்பட்டு காணப்படும். அதற்கு நொதிக்க வைத்த அரிசி நீரை எடுத்து, முகம், கை, கால்களில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகள் அனைத்தும் சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, சரும நிறத்தை மேம்படுத்தி காட்ட பெரிதும் உதவி புரியும். நீங்கள் உங்கள் கை, கால்களை வெள்ளையாக்க விரும்பினால், இந்த வழிகளை பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம்.



Click it and Unblock the Notifications
