Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சனி பகவான்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
அதிக செலவு செய்யாம வெள்ளையாகணுமா? அப்ப வாரத்திற்கு 3 முறை இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
Skin Care Tips In Tamil: யாருக்கு தான் வெள்ளையாக ஆசை இருக்காது. நிச்சயம் ஒவ்வொருவருமே தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு பொருட்களை வாங்கி சருமத்திற்கு பயன்படுத்துவோம்.
ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால், சரும செல்கள் தான் சேதமடையும். அதுவும் அதிகமாக சருமத்திற்கு கெமிக்கல்களைப் பயன்படுத்தும் போது, விரைவில் சருமம் முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடும்.

பழங்காலம் முதலாக அழகைப் பராமரிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் தான் பயித்தம் பருப்பு மாவு அல்லது பச்சை பயறு மாவு. பச்சை பயறில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. இது சருமத்திற்கு மிகவும் நல்லது.
முக்கியமாக பயித்தம் பருப்பு மாவைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தழும்புகள் போன்றவை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.
மேலும் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்து, முடியின் நிறமும் மங்கும். அதற்கு பயித்தம் பருப்பைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை போடுவது சிறந்த பலனைத் தரும். இப்போது சரும நிறம் அதிகரிக்க பயித்தம் பருப்பு மாவைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* முதலில் ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பயித்தம் பருப்பு மாவை எடுத்து, அத்துடன் அதற்கு இணையாக தேனையும் எடுத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் சீராக தடவி, 15-20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்தசெல்களை நீக்கி, முகத்திற்கு உடனடி பொலிவை அளித்து, சரும நிறத்தை மேம்படுத்திக் காட்டும்.
ஃபேஸ் பேக் #2
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பயித்தம் பருப்பு மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளி ஜூலை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையான தழும்புகளை போக்கி, முகத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்கும்.
ஃபேஸ் பேக் #3
* உங்கள் முகம் வெயிலால் கறுமையாகி விட்டதா? அப்படியானால் அந்த கருமையைப் போக்க பயித்தம் பருப்பு மாவு பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு ஒரு பௌலில் பயித்தம் பருப்பு மாவை சிறிது எடுத்து தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு தூங்கும் முன் செய்தால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
ஃபேஸ் பேக் #4
பெண்களே! உங்கள் முகத்தில் முடி அசிங்கமாக வளர்கிறதா? முடியின் வளர்ச்சியை மற்றும் அதன் நிறத்தை மங்க வைக்க வேண்டுமா? அப்படியானால் பின்வரும் பயித்தம் பருப்பு மாவு ஃபேஸ் பேக்கை போடுங்கள்.
* அதற்கு ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் பயித்தம் பருப்பு மாவை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1/2 டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீர் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்து, நிறம் மங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.



Click it and Unblock the Notifications
