Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
முகத்தில் வளரும் முடியை வலிக்காம நீக்கணுமா? அப்ப கோதுமை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips: பெண்களின் முகத்தில் வளரும் முடியை நீக்க என்ன தான் விலை உயர்ந்த முக அகற்றும் சாதனங்கள் இருந்தாலும், இயற்கை வைத்தியங்களுக்கு இணையாக வர முடியாது. ஏனெனில் சரும முடியை அகற்ற இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, சருமத்தில் வளரும் முடி வலியின்றி நீக்கப்பட்டு, அதன் வளர்ச்சி தடைபடுவது மட்டுமின்றி, சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். அப்படி சரும முடிகளை போக்க உதவும் ஒரு பொருள் தான் கோதுமை மாவு.
இந்த கோதுமை மாவை ஒருவர் சரும பராமரிப்புகளில் பயன்படுத்தி வந்தால், அது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவி புரிந்து, சருமத்திற்கு நல்ல பொலிவை வழங்கும். அதுவும் சருமத்தில் வளரும் முடிகளை அகற்ற இந்த கோதுமை மாவை பேஸ்ட்டாக தயாரித்து, சருமத்தில் தடவும் போது, அது சரும முடிகளை தளர்த்தி, எளிதில் வெளியேற்ற உதவும்.

இப்படி அடிக்கடி கோதுமை மாவை பயன்படுத்தும் போது, காலப்போக்கில் முடியின் வேர்கள் பலவீனமடைந்து, அதன் வளர்ச்சி குறைந்து, சருமத்தில் முடி வளர்வது நின்றுவிடும். கீழே முகத்தில் வளரும் முடிகளைப் போக்க கோதுமை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. கோதுமை மாவு ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் அல்லது பால் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
* ஒரு பௌலில் கோதுமை மாவு, பால்/தயிர் மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு கைகளை நீரில் நனைத்து, பின் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது சருமத்தில் உள்ள முடிகள் மென்மையாக அகற்றப்படுவதை உணரலாம்.
* அதன் பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்த்த வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த சிறந்த பலன் கிடைக்கும்.
2. கோதுமை மற்றும் தேன் பேக்
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
* ஒரு பௌலில் கோதுமை மாவு, தேன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, நன்கு 20-25 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்ததும், கீழிந்து மேலாக உரிக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. கோதுமை மாவு மற்றும் கடலை மாவு ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் அல்லது பால் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, கடலை மாவு மற்றும் தயிர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி ஓரளவு காய வைக்க வேண்டும்.
* பின்பு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக முகத்தை ஸ்க்ரப் செய்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப் முகத்தில் வளரும் முடிகளை நீக்குவது மட்டுமின்றி, சருமத்திற்கு நல்ல பொலிவையும் தருகின்றன.
கோதுமை மாவை சரும பராமரிப்பிற்கு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்
முகத்தில் வளரும் முடியை நீக்க கோதுமை மாவைப் பயன்படுத்தும் போது, முகத்தில் வளரும் முடி நீக்கப்படுவது மட்டுமின்றி, பின்வரும் நன்மைகளும் கிடைக்கும். அவையாவன:
* சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் குறையும்.
* சரும அமைப்பு மேம்படும்.
* சருமத்தில் உள்ள கருமை குறையத் தொடங்கும்.
எனவே, இனிமேல் முகத்தில் வளரும் முடிகளை அகற்ற வேக்சிங், ஷேவிங் செய்வதற்கு முன்பாக, இந்த கோதுமை மாவைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வாருங்கள். இதனால் உங்கள் பணமும் மிச்சமாகும், குறைந்த செலவில் சரும அழகும் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications