Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப பாதாமை இப்படி யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips: நட்ஸ்களில் ஒன்றான பாதாம் உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்களை மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த தேவையான சத்துக்களையும் கொண்டுள்ளன. அதுவும் இதில் வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புக்கள் அமிலங்கள் உள்ளன.
இவை சருமத்தின் ஆழத்தில் நுழைந்து ஊட்டமளிக்க உதவுகிறது மற்றும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. முக்கியமாக விரைவில் முதுமை தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கிறது. இதனால் தான் தற்போது பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களில் பாதாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட பாதாமில் உள்ள சத்துக்களை கெமிக்கல் கலந்த பொருட்களில் இருந்து பெறுவதை விட, நேரடியாக பாதாமைக் கொண்டே சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். இப்போது பொலிவான சருமத்தைப் பெற பாதாமை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
1. பாதாம் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 5 பாதாமை இரவு தூங்கும் முன் பாலில் ஊற வைக்க வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் அந்த பாதாமை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமம் பளிச்சென்று பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
2. பாதாம் எண்ணெய்
* பாதாம் எண்ணெய் சருமத்தின் ஆழத்தில் நுழைந்து, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். அதற்கு சிறிது பாதாம் எண்ணெயை எடுத்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு அதை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் மசாஜ் செய்து வந்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.
3. பாதாம் மற்றும் தேன் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு சிறிது பாதாமை எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும்.
4. பாதாம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பாதாம் பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை கண்ணாடி போன்று பளபளவென்று வைத்துக் கொள்ள உதவும்.
5. பாதாம் மற்றும் ரோஸ் வாட்டர் டோனர்
* இந்த டோனருக்கு பாதாமை அரைத்து அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சம அளவில் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பஞ்சுருண்டையில் இந்த டோனரை நனைத்து முகத்தில் தினமும் தடவி வந்தால், முகம் உடனடி புத்துணர்ச்சி பெறும் மற்றும் சருமத் துளைகளும் இறுக்கமடைந்து, முகத்தில் உள்ள அசிங்கமான மேடு பள்ளங்கள் மறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
