Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வெயிலால் கருப்பான கைகளை வெள்ளையாக்கணுமா? அப்ப தினமும் நைட் இத யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: உங்கள் கைகள் கருமையாக உள்ளதா? கருப்பாக இருக்கும் உங்கள் கைகளை எப்படி வெள்ளையாக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக நிறைய க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? இருப்பினும் எந்த மாற்றமும் தெரியவில்லையா? அப்படியானால் இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்.
நம் வீட்டு சமையலறையில் சரும நிறத்தை அதிகரிக்க உதவும் ஏராளமான பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களைக் கொண்டு கைகளுக்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி சரும நிறத்தை அதிகரிக்கலாம். இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.

1. கடலை மாவு, மஞ்சள் பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2-3 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கைகளை கழுவி, மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
2. தேன், எலுமிச்சை பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கைகளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. தயிர், தக்காளி பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கைகளில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின் 5-10 நிமிடம் ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும்.
* அதன் பின் கைகளை துடைத்து மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
4. உருளைக்கிழங்கு சாறு
* உருளைக்கிழங்கை எடுத்து துருவி, அதிலிருந்து சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த சாற்றினை கைகளில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரில் பஞ்சுருண்டையை நனைத்து துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை விரைவில் மறையும்.
5. வெள்ளரிக்காய் சாறு
* வெள்ளரிக்காயை எடுத்து துருவி, அதிலிருந்து சாற்றினை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை காட்டனில் நனைத்து கைகளில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு கைகளை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
6. சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கைகளை கழுவ வேண்டும்.
* அதன் பின் கைகளை துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
7. முல்தானி மெட்டி மற்றும் கற்றாழை பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கைகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
8. பப்பாளி மற்றும் தக்காளி சாறு பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கைகளில் தடவி 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* பின்பு கைகளை துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications