பிம்பிள் அதிகமா வருதா? அப்ப நைட் தூங்கும் முன் இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க...

Skin Care Tips In Tamil: உங்கள் முகத்தில் பிம்பிள் அதிகமா வருதா? அந்த பிம்பிள் உங்கள் அழகை கெடுக்கிறதா? ஒருவருக்கு பிம்பிளானது இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பால் சருமத்துளைகளில் அடைப்பை ஏற்படுத்தும் போது வருகிறது.

பிம்பிள் ஒருவருக்கு எந்த வயதிலும் ஏற்படலாம். முகத்தில் பிம்பிள் அதிகமாக வந்தால், அதைத் தடுக்க நிறைய பேர் கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

Skin Care Tips: Homemade Overnight Face Mask For Pimples In Tamil

ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால், அது பிம்பிளை தடுக்கிறதோ இல்லையோ, சில சமயங்களில் தீவிரமாக்கிவிடும். மேலும் கெமிக்கல் கலந்த பொருட்கள் அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று கூறி விட முடியாது.

ஆனால் முகத்தில் வரும் பிம்பிளை வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே தடுக்கலாம். அதுவும் அந்த பொருட்களைக் கொண்டு இரவு தூங்கும் முன் ஃபேஸ் பேக் தயாரித்து, முகத்திற்கு பயன்படுத்தி வந்தால், பிம்பிளைத் தடுக்கலாம். இப்போது பிம்பிளைத் தடுக்க உதவும் சில இரவு நேர ஃபேஸ் பேக்குகளைக் குறித்து காண்போம்.

டீ-ட்ரீ ஆயில் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 கப் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் லாவெண்டர் எண்ணெய் மற்றும் டீ-ட்ரீ ஆயிலை 3-4 துளிகள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை இதை பயன்படுத்தி வந்தால், பிம்பிள் வருவதைத் தடுக்கலாம்.

ஓட்ஸ் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி, 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 2 டேபிள் ஸ்பூன் க்ளே பொடி மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஈரத் துணியால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி துடைக்க வேண்டும். அதன் பின் மைல்டு மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

கற்றாழை ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/4 கப் கற்றாழை ஜெல், 1/2 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்த பின் மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று, பிம்பிள் வராமல் இருக்கும்.

தக்காளி ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு சிறிய அளவிலான தக்காளியை எடுத்து அரைத்து, அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், பிம்பிள் வருவது தடுக்கப்படுவதோடு, முகமும் பிரகாசமாக இருக்கும்.

அவகேடோ ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த அவகேடோ பழத்தை எடுத்து, அதன் சதைப் பகுதியை மட்டும் ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் சிறிது தயிர், 2 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஓட்ஸ் பொடியை சிறிது சேர்த்து கலந்து, அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் அனைத்தும் முகத்தில் வரும் பிம்பிளைத் தடுத்து, முகப்பொலிவை அதிகரித்து, முகத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவும் ஃபேஸ் பேக்குகளாகும். எனவே இவற்றில் உங்களுக்கு எது ஏற்றதோ அதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

Story first published: Tuesday, June 6, 2023, 21:31 [IST]
Desktop Bottom Promotion