Latest Updates
-
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
உங்க முகம் டல்லா இருக்கா? அப்ப நைட் டைம்ல இந்த ஃபேஸ் ஸ்கரப்பை யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: தற்போது கோடைக்காலம் என்பதால் அதிகப்படியான வெயிலால் சருமம் அதிகமாக பாதிக்கப்படும். அதுவும் வெயிலில் அதிகம் சுற்றுபவர்களின் சருமம் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும்.
அதோடு, தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக, சருமத் துளைகளில் அழுக்குகள் அதிகம் சேர்கிறது. இப்படி சேரும் அழுக்குகளை நீக்க முயற்சிக்கும் நாம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க மறந்துவிடுகிறோம்.

முகம் பொலிவாக இருக்க வேண்டுமானால், சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்கினால் போதாது, இறந்த செல்களையும் அகற்ற வேண்டும். அதற்கு முகத்திற்கு ஸ்கரப்புகளை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் கெமிக்கல் கலந்த ஸ்கரப்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு ஸ்கரப் தயாரித்து பயன்படுத்தினால், இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடும் பளிச்சென்றும் இருக்கும். கீழே முகத்தை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் ஸ்கரப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தேங்காய்-லெமன் ஸ்கரப்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/4 கப் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவி விட்டு, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி மென்மையாக 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய்-புதினா ஸ்கரப்
இந்த ஸ்கரப்பிற்கு பாதி வெள்ளரிக்காய் மற்றும் ஒரு கையளவு புதினாவை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஸ்ட்ராபெர்ரி-சர்க்கரை ஸ்கரப்
4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஃபோர்க் கொண்டு நன்கு மென்மையாகும் வரை குத்த வேண்டும். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்த கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
எலுமிச்சை-உப்பு ஸ்கரப்
முகம் அதிக டல்லாக இருந்தால், ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை கழுவி விட்டு, ஈரப்பதமான முகத்தில் தயாரித்து வைத்துள்ள கலவையை தடவி மென்மையாக தேய்க்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
தர்பூசணி-நாட்டுச் சர்க்கரை ஸ்கரப்
இந்த ஸ்கரப்பிற்கு ஒரு கப் தர்பூசணி துண்டுகளை எடுத்து அவற்றை மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1/4 கப் நாட்டுச் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்க்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
பப்பாளி-தயிர் ஸ்கரப்
ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளியை சிறிது எடுத்து, அவற்றை மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதல் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
அன்னாசி-தேங்காய் எண்ணெய் ஸ்கரப்
இந்த ஸ்கரப்பிற்கு சிறிது அன்னாசி துண்டுகளை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/4 கப் சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
