Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
முகத்தில் உள்ள அசிங்கமான குழிகளை போக்கணுமா? அப்ப வாரத்துக்கு 2 முறை இந்த 2 பொருளை கலந்து யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: ஒருவரது முகச் சருமம் சீராக இருந்தால் தான் அது அழகான தோற்றத்தைத் தரும். ஆனால் சிலரது முகத்தில் சருமத்துளைகள் திறந்தவாறு இருக்கும். இப்படி திறந்துள்ள சருமத்துளைகளானது முகத்தில் மேடு பள்ளங்களாக தெரியும்.
இது ஒருவரது முகத்திற்கு முதிர்ந்த தோற்றத்தை மட்டுமின்றி, அசிங்கமான தோற்றத்தையுத் தரக்கூடும். உங்கள் முகத்தில் இப்படி மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா? ஒவ்வொரு முறை கண்ணாடியைப் பார்க்கும் போதும், அந்த அசிங்கமான மேடு பள்ளங்களை எப்படி மறைப்பது என்று யோசிப்பீர்களா?

அதற்கான வழிகள் ஏதும் தெரியவில்லையா? ஆனால் இக்கட்டுரையில் முகத்தில் உள்ள அசிங்கமான மேடு பள்ளங்களைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முயற்சித்து நன்மை பெறுங்கள்.
வழி #1
உங்கள் முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா? அப்படியானால் தக்காளி சிறிது எடுத்து, அதை முகத்தில் தேய்த்து 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை முதலில் கழுவி, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், தக்காளியுடன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். அதுவே அதிக வறட்சியை சந்தித்தால், தயிருடன் தக்காளியை சேர்த்து பயன்படுத்துங்கள்.
வழி #2
முகத்தில் இருக்கும் குழிகளை விரைவில் மறைக்க வேண்டுமானால், பாதி எலுமிச்சை சாற்றினை எடுத்து பஞ்சுருண்டையில் நனைத்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். ஒருவேளை உங்களுக்கு சென்சிவ் சருமம் என்றால், எலுமிச்சை சாற்றில் நீரை சேர்த்து கலந்து பயன்படுத்த வேண்டும்.
வழி #3
ஓட்ஸ் பொடியுடன் கடலை மாவை சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தும் போது, அது சருமத்திற்கு நல்ல நிறத்தைத் தருவதோடு, விரிவடைந்த சருமத் துளைகளையும் சுருக்கும். அதற்கு ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை சிறிது எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவிய பின், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வழி #4
முகத்தில் சருமத் துளைகள் விரிவடைந்த நிலையில் இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவுடன் எலுமிச்சை சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், சருமத் துளைகள் சுருங்கும்.
வழி #5
சரும அழகை மேம்படுத்துவதில் பால் பெரிதும் உதவி புரிகிறது. முக்கியமாக பால் பலவிதமான சரும பிரச்சனைகளைப் போக்கும் திறன் கொண்டது. அப்படிப்பட்ட பாலை காய்ச்சாமல் ஃப்ரீசரில் உள்ள ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி உறைய வைத்து, பின் அந்த பால் கட்டியால் தினமும் முகத்தை 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத் துளைகளை சுருக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.
வழி #6
தேன் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு, சருமத்துளைகளை சுருங்கச் செய்கிறது. இதனால் இது சரும பராமரிப்பு பொருட்கள் அனைத்திலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. உங்கள் முகத்தில் மேடு பள்ளம் அதிகமாக இருந்தால், தேனுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
வழி #7
முகத்தில் விரிவடைந்துள்ள சருமத் துளைகளை சுருங்கச் செய்ய வேண்டுமானால், சருமத்துளைளில் உள்ள அதிகப்படியான எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்க வேண்டும். ஏனெனில் இவை சருமத் துளைகளில் அதிகம் தேங்கியிருந்தாலும், அது முகத்தில் மேடு பள்ளமான தோற்றத்தைத் தரும்.
அதுவும் காபித் தூள் மற்றும் தேனை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், விரைவில் சருமத் துளைகள் சுருங்கி, முகமும் பொலிவு பெறும்.



Click it and Unblock the Notifications