Latest Updates
-
அக்டோபர் 09-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சனி பகவான்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும்
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப வீட்ல இந்த பொருட்களை வெச்சு ஃபேஷியல் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: யாருக்கு தான் நல்ல பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தின் மீது ஆசை இருக்காது. ஒவ்வொருவருமே தங்களின் முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்க வேண்டுமென்றே விரும்புவார்கள். இதற்காக பெண்கள் பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் முகத்திற்கு ஃபேஷியல், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று போடுவார்கள்.
ஆனால் அழகு நிலையங்களில் போடப்படும் இவை அனைத்துமே கெமிக்கல்களைக் கொண்டு செய்யப்படுபவை. சிலருக்கு இந்த கெமிக்கல்கள் நற்பலனைத் தந்தாலும், இன்னும் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதோடு கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களை தொடர்ந்து கொடுத்தால், சரும செல்கள் பாதிப்படையக்கூடும்.

அதோடு விரைவில் முதுமைத் தோற்றத்தையும் பெறக்கூடும். இதைத் தவிர்க்க ஒரே வழி இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பது தான். அதுவும் நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யும் ஃபேஷியல், அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றதாக இருக்கும்.
மேலும் ஃபேஷியல் செய்வதால் பெறும் நன்மைகளைப் பற்றி கூற வேண்டுமானால், இது சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும், கரும்புள்ளிகளை நீக்கும், சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்களை நீக்கும், சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையின் அளவு குறையும். கீழே சரும பொலிவை அதிகரிக்கும் சில நேச்சுரல் ஃபேஷியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபேஷியல் #1
* இந்த ஃபேஷியலுக்கு முதலில் ஒரு பௌலில் 3-4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, 1/2 மசித்த அவகேடோ கூழ், 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அவற்றை நன்கு ஒருசேர கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு கைகளை நீரில் நனைத்து, முகத்தை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஷியல் போட்டால், முகம் உடனே பளிச்சென்று காட்சியளிக்கும்.
ஃபேஷியல் #2
* இந்த ஃபேஷியலுக்கு ஏதேனும் பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஜொஜோபா எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஷியலை அடிக்கடி பயன்படுத்தினால், முகம் உடனே பளிச்சென்று ஜொலிக்கும்.
ஃபேஷியல் #3
* இந்த ஃபேஷியல் அனைவரது வீட்டிலும் வழக்கமாக இருக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடியது.
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஷியலை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று நேச்சுரல் ஃபேஷியலுமே சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும். அதோடு இந்த ஃபேஷியல் சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ள உதவி புரியும்.



Click it and Unblock the Notifications
