Latest Updates
-
அக்டோபர் 09-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சனி பகவான்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும்
பணம் செலவு செய்யாம வெள்ளையாகணுமா? அப்ப கற்றாழை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பொதுவாக காணப்படும் ஒரு செடி தான் கற்றாழை. இந்த கற்றாழை ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது என்பதை அனைவருமே அறிவோம். முக்கியமாக கற்றாழை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைத் தவிர, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
நீங்கள் உங்கள் அழகை அதிகரிக்க விரும்புகிறீர்களா? உங்கள் அழகை மேம்படுத்த மாதந்தோறும் நிறைய பணத்தை செலவழித்து வருகிறீர்களா? இனிமேல் உங்கள் அழகை மேம்படுத்த அதிக பணம் செலவழிக்க விரும்பவில்லையா? அப்படியானால் இந்த கற்றாழையைக் கொண்டே சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும், அழகையும் மேம்படுத்தலாம்.

அதற்கு கற்றாழையைக் கொண்டு ஒருசில ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போட்டு வந்தாலே போதும். கீழே சருமத்தின் அழகையும், நிறத்தையும் மேம்படுத்த உதவும் சில கற்றாழை ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை அடிக்கடி பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.
ஃபேஸ் பேக் #1
* நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை மற்றும் பொலிவை அதிகரிக்க விரும்பினால், இந்த ஃபேஸ் பேக்கை போடலாம்.
* அதற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஃபேஸ் பேக் #2
* உங்கள் சரும நிறம் கருமையாகி இருப்பது போன்று தென்படுகிறதா? உங்கள் சரும நிறத்தை மேம்படுத்த, இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
* அதற்கு நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்து, அதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் குறைவாக எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சாதாரண சருமம் என்றால் சற்று அதிகமாகவே சேர்க்கலாம். இந்த கலவையை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
* பின் அதை தினமும் இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* இப்படி செய்து வந்தால், சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஃபேஸ் பேக் #3
* உங்கள் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிகிறதா? அப்படியானால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்.
* அதற்கு ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது தடுக்கப்படும்.
ஃபேஸ் பேக் #4
* வெயிலில் சுற்றி உங்கள் சரும நிறம் மாறிவிட்டதா? மீண்டும் பழைய நிறத்தைப் பெற வேண்டுமானால், இந்த ஃபேஸ் பேக்கைப் போடுங்கள்.
* அதற்கு துவரம் பருப்பு பொடியை எடுத்து, அத்துடன் கற்றாழை ஜெல், தக்காளி சாறு, இஞ்சி சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள், இந்த ஃபேஸ் பேக்கை போட்ட பின், சில துளிகள் தேங்காய் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* இதனால் சருமம் மேலும் வறட்சியடையாமல் இருக்கும்.
ஃபேஸ் பேக் #5
* உங்கள் முகம் பொலிவிழந்து உள்ளதா? உங்கள் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? அப்படியானால் இந்த ஃபேஸ் பேக்கை போடலாம்.
* அதற்கு ஒரு பௌலில் சிறிது கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
