Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
எப்பவும் பளிச்சுன்னு வெள்ளையா ஜொலிக்கணுமா? அப்ப இந்த சோப்பை வாங்கி யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: கரித்தூள் பற்றி கேள்வி பட்டு இருப்பீங்க. அந்தக் காலத்தில கரித்தூளைத் தான் நம் முன்னோர்கள் பல் தேய்க்க பயன்படுத்தி வந்தார்கள். கரித்தூள் நம் பற்களை வெண்மையாக்க மட்டுமல்ல நம் சருமத்தை அழகாக மாற்றவும் உதவுகிறது. இந்த செயலாக்கப்பட்ட கரித்தூள் சருமத்தில் உள்ள நச்சுக்கள், மாசுக்கள் மற்றும் துர்நாற்றங்கள் இவற்றையெல்லாம் உறிஞ்சி சருமத்திற்கு பலவித நன்மைகளை வழங்குகிறது.
அதனால் அழகு சாதனப் பொருட்களான சோப்பு, க்ரீம்கள் போன்றவற்றில் கரித்தூளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கரித்தூள் சோப்புகள் துளைகளில் சிக்கியுள்ள எண்ணெய் பசையை உறிஞ்சி சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. இந்த சாம்பல் சோப்பு உங்க தோலில் எந்த மாதிரியான அதிசயங்களை செய்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

சாம்பல் சோப்பு என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது?
இந்த சாம்பல் சோப்பு செயல்படுத்தப்பட்ட கார்பனில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த சாம்பலை தயாரிக்க இயற்கையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த கரித்தூள் கரி, சாதாரண நிலக்கரி, மரம் அல்லது தேங்காய் உமி போன்ற இயற்கை கார்பன் மூலங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது சருமத்தில் உள்ள அழுக்குகளை எளிதாக உறிஞ்சுவிடும். இதனால் உங்கள் சருமம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும்.
செயல்படுத்தப்பட்ட கரித்தூளுக்கும் வழக்கமான கரித்தூளுக்கும் என்ன வித்தியாசம்
செயல்படுத்தப்பட்ட கரித்தூள் என்பது செயல்படுத்தப்பட்ட கார்பன் என்று அழைக்கப்படுகிறது. இந்த கரித்தூளை அதிக வெப்பநிலையில் சூடாக்கி இதனுடன் ஆக்ஸினேற்ற வாயு அல்லது மற்றொரு இராசயனங்களை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கொட்டைகள், மரம், பழ கழிவுகள், காகித ஆலை கழிவுகள் போன்றவை செயல்படுத்தப்பட்ட கரித்தூளை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. எனவே இது சருமத்தில் உள்ள அழுக்குகளை எளிதாக உறிஞ்சும் திறன் கொண்டது.
செயல்படுத்தப்பட்ட கரித்தூள் ஆனது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை அசுத்தங்களை ஒட்டிக் கொண்டு உறிஞ்சும். இந்த செயலாக்கப்பட்ட கரித்தூள் வழக்கமான கரியைப் போன்று தோன்றினாலும் நிறைய நுண் துளைகள் கொண்டது. இது சருமத்தில் அதிக அளவில் பரவக் கூடியது. சக்தி வாய்ந்த ஒன்று.
சாம்பல் சோப்பின் பயன்கள்:
சருமத்தை மிருதுவாக மாற்றும்
கரி சோப்புகள் உங்கள் சருமத்தை மிருதுவாக மாற்ற கூடியது. இது உங்கள் சருமத்தை எண்ணெய்கள் இல்லாமல் மாற்றும். அதே நேரத்தில் இந்த சோப்பில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய எண்ணெய்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. இது உங்கள் சருமத்தின் மென்மையை அதிகரிக்கும்.
எண்ணெய் சருமத்திற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது
உங்கள் உடலில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்க இந்த சாம்பல் சோப்பு உதவுகிறது. இது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
பருக்களை குறைக்க உதவி செய்யும்
செயல்படுத்தப்பட்ட கரித்தூள் உங்கள் முகப்பருக்களை குறைக்க உதவுகிறது. இது தோலில் இருக்கும் நச்சுக்கள், தோல் அழுக்குகளை நீக்க உதவுகிறது. முகப்பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்புகளை நீக்க உதவுகிறது.
சொரியாஸிஸ் சிகிச்சைக்கு உதவுகிறது
இந்த சாம்பல் சோப்பு தோல் அழற்சியை குறைக்க உதவுகிறது. செயல்படுத்தப்பட்ட கரித்தூள் சருமத்தில் உள்ள தோல் அழற்சியை குறைக்க உதவுகிறது. உங்களுக்கு சொரியாஸிஸ் பிரச்சினை இருந்தால் அதை குறைக்க உதவுகிறது. இது சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்களை நீக்கும் எக்ஸ்ஃபோலிட்டராக செயல்படுகிறது. அரிக்கும் தோலழற்சி போன்றவற்றை போக்க உதவுகிறது.
சரும துளைகளின் அளவை குறைக்க உதவுகிறது
சரும துளைகளில் படிந்து இருக்கும் அழுக்குகளை நீக்கி சரும துளைகளின் அளவை குறைக்க உதவுகிறது. சரும துளைகளின் அளவை குறைத்து உங்களுக்கு இளமைத் தோற்றத்தை கொடுக்கும்.
வயதாவதை தடுக்கிறது
சாம்பல் சோப்பு முன்கூட்டியே வயதாகுவதை தடுக்கிறது. இது தோல் சுருக்கங்கள், சரும கோடுகள் போன்றவற்றை போக்க உதவுகிறது. முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது
சாம்பல் சோப்பு அதிகப்படியான எண்ணெய்களை சருமத்தில் இருந்து அகற்றும். சரும அழற்சி, சருமம் சிவத்தல் போன்றவற்றை போக்க உதவுகிறது.
இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது
சாம்பல் சோப்பு சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது. இது சருமம் நீண்ட காலத்திற்கு இளமையாகவும், மீள் தன்மையுடனும் இருக்க உதவி செய்யும். இந்த கரி சோப்பு பொடுகு சிகிச்சைக்கு பயன்படுகிறது. எனவே பொடுகு இருப்பவர்கள் கூட இந்த சாம்பல் சோப்பை பயன்படுத்தி வரலாம்.



Click it and Unblock the Notifications