இரட்டை குழந்தைகளை கொண்ட பெண்கள் அவர்களுக்கு எப்படி சரியாக பாலூட்ட வேண்டும் தெரியுமா?

தாய்மை என்ற சொல் எவ்வளவு மதிப்பு மிக்கது, ஆற்றல் மிக்கது என்பது அனைவருக்கும் தெரியும். தாய்மை அடைகின்ற பெண்களின் மகிழ்ச்சிக்கு
எல்லையே இல்லை என்று கூறலாம். தான் தாயாகப் போகிறோம் என்ற இன்பமே அவர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியை கொடுக்கும்.

மேலும் பிரசவம் என்பது பெண்களுக்கு மறு பிறப்பு என்று சொல்லப்படுகிறது இதில் அவர்கள் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் போது எந்த அளவு சந்தோஷம் கிடைக்குமோ அதுபோல பல மடங்கு இரட்டைகளை பெற்றெடுப்பதால் கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் எந்த அளவும் ஐயமில்லை. ஆனால் ஒற்றைப் பிள்ளையை வைத்து அவர்கள் அதிக அளவு பாடுபடுவார்கள்.

Tips and Schedule to Breastfeed Twin Babies in Tamil

இரட்டை பிள்ளைகள் என்றால் அதை எப்படி சமாளிப்பது என்று அவர்களுக்கு தெரியாது. அப்படி இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும்

சவால்களை எப்படி சமாளிப்பார்கள். அப்படி சமாளிக்க முடியாத தாய்மார்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய டிப்ஸை ஃபாலோ செய்வதின் மூலம் எளிதாக உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

இரட்டையர்களுக்கு தாயான தாயார் சந்திக்கும் பிரச்சனைகள்
இரட்டைப் பிள்ளைகளைப் பெற்ற தாயார் சந்திக்க கூடிய பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதில் குறிப்பாக இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுப்பதுதான். அப்படிப்பட்ட தாய்ப்பாலை அந்த இரண்டு குழந்தைகளுக்கும் எளிதாக ஊட்ட சில குறிப்புகளை இங்கே கொடுத்திருக்கிறோம். இதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பிரச்சனையை நீங்கள் தீர்த்துக் கொள்ளலாம்.


தாய்ப்பால் கொடுப்பதற்கான டிப்ஸ்
இரட்டைக் குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரப்ப குறைவாக இருக்கக்கூடிய நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் பால் கொடுப்பது என்பது சரியான விஷயமாக இருக்காது. எனவே ஒரு குழந்தைக்கு பால்
ஊட்டி முடித்த பின்னர் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை விட்டு அடுத்த குழந்தைக்கு பால் ஊட்டுவது சிறப்பாக இருக்கும்.

சிசேரியன் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றிருந்தால் பாலூட்டும் போது அவர்களுக்கு வலி மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நீங்கள் பிரஸ்ட் பம்பை பயன்படுத்தி தாய்ப்பாலை பதப்படுத்தி குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

தாய்ப்பால் சேமிப்பு
இரண்டு குழந்தைகளுக்கும் குறித்த நேரத்தில் பசியை போக்க வேண்டிய கட்டாயம் தாய்மார்களுக்கு இருப்பதால் தாய்ப்பால் சுரப்பு அவர்கள் நினைக்கும் நேரத்தில் போதிய அளவு இருக்காது. எனவே போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கும் போது சேமித்து வைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். அப்படி நீங்கள் சேமித்து வைப்பதின் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு அந்தப் பாலை சிறப்பான முறையில் கொடுத்து ஆரோக்கியத்தை அதிகளவு தர முடியும்.

தாய்ப்பால் கொடுக்கும் முறை
குழந்தைகளுக்கு பாலூட்டும் போது வலது, இடது என்று இரண்டு மார்பகங்களிலும் மாறி மாறி பால் ஊட்டுவது அவசியமாகும். மேலும் உங்கள் இரண்டு மார்பகப் பகுதிகளிலும் பாலை ஊட்ட முயற்சி செய்யுங்கள். தாய்ப்பால் சுரப்பு அதிக அளவு இருக்கும் போது இரண்டு குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் பால் ஊட்டுவது சிறப்பானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு செய்வதின் மூலம் குழந்தைகளுக்கு இடையே உள்ள புரிதல் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.


தாய்ப்பால் ஊட்டும்போது நீங்கள் வசதியான இடத்தில் அமர்ந்து குழந்தைகளுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாதபடி தாய்ப்பால் ஊட்டுவது சிறப்பாக இருக்கும். இரட்டை பிள்ளைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் மிகவும் பொறுமையோடு இருப்பது அவசியமாகும். அந்த வகையில் நீங்கள்
பொறுமையாக இருந்து உங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதின் மூலம்
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து எளிதில் கிடைப்பதோடு மிக விரைவில் பசியாறுவார்கள்.

இரண்டு குழந்தைகளுக்கு நீங்கள் பால் கொடுக்க வேண்டி இருப்பதால்
பால் சுரப்பை அதிகரிக்க கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நீங்கள்
எடுத்துக் கொள்வதின் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அளவு நீங்கள் பாலை கொடுக்க முடியும்.

Story first published: Sunday, June 4, 2023, 19:45 [IST]
Desktop Bottom Promotion