Latest Updates
-
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? இதோ அதைத் தடுக்கும் சில சிம்பிள் டிப்ஸ்...
Sweating In Tamil: கோடை காலத்தில் அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக வியர்வை துர்நாற்றம் உள்ளது. இந்த வியர்வை துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம் பாக்டீரியாக்கள். அதிகப்படியான வியர்வையால் நம் சருமத்தில் பாக்டீரியாக்கள் பெருக்கம் அதிகமாகி வியர்வை துர்நாற்றமானது ஏற்படுகிறது.
மேலும் கோடைகாலத்தில் வியர்க்குரு, சரும பிரச்சனைகள் போன்ற ஏராளமான பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. நீங்கள் ஆபிஸ்க்கு போகும் போதும் சரி, வெளியிடங்களுக்கு பயணிக்கும் போதும் சரி வியர்ப்பது உங்களுக்கு மிகப்பெரிய இன்னல்களை உண்டாக்குகிறது.

அதிலும் இந்த கோடைகாலத்தில் வியர்ப்பது மிகவும் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த டிப்ஸ்கள் மூலம் உங்கள் அதிகப்படியான வியர்வை பிரச்சினையை எளிதாக முடிக்கு கொண்டு வர முடியும்.
நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்
கோடைகாலத்தில் வியர்வையை உறிஞ்சக் கூடிய காட்டன் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். நல்ல காற்றோட்டமான ஆடைகள் உங்களுக்கு அதிகப்படியாக வியர்ப்பதை தடுக்கும். எனவே காட்டன் உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிவது அவசியம். மேலும் இறுக்கமான உள்ளாடைகளை தடுத்து சருமம் சுவாசிக்க கூடிய வகையில் உள்ள உள்ளாடைகளை தேர்ந்தெடுங்கள்.
வியர்க்காமல் இருக்க சரியான உணவை தேர்ந்தெடுங்கள்
அதிகப்படியாக வியர்ப்பதற்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே வியர்வை அதிகமாக வெளிப்படும் நபர்கள் காரசாரமான உணவுகள், காஃபின் போன்றவற்றை தவிருங்கள். அதே மாதிரி ஆல்கஹால் உட்கொள்வதும் உங்களுக்கு வியர்வையை உண்டாக்கும். ஏனெனில் ஆல்கஹால் அசிட்டிக் அமிலமாக வளர்ச்சிதை மாற்றம் அடைகிறது. இதனால் அது வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே கோடை காலத்தில் ஆல்கஹாலை தவிர்ப்பது நல்லது.
வலுவான ஆண்டிபெர்ஸ்பிரண்ட் பயன்படுத்தவும்
நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது அதிகப்படியாக வியர்ப்பதை தடுக்க வலுவான ஆன்டிபெர்ஸ்பிரண்ட்டை பயன்படுத்த வேண்டும். இது வியர்வை துர்நாற்றத்தை மறைக்க உதவுகிறது. அதே மாதிரி அதிகளவு அலுமினியம் குளோரைடைக் கொண்டிருக்கும் ஆன்டிபெர்ஸ்பிரண்ட்களைப் பயன்படுத்துங்கள். இரவில் ஆன்டிபெர்ஸ்பிரண்ட்டை பயன்படுத்துவது நல்ல பலனை உங்களுக்கு கொடுக்கும். அதே நேரத்தில் ஆன்டிபெர்ஸ்பிரண்ட்டை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் அக்குள் பகுதி உலர்வாக இருக்க வேண்டும். ஈரமான அக்குள் பகுதியில் ஆன்டிபெர்ஸ்பிரண்ட்டை பயன்படுத்துவது எரிச்சலை உண்டாக்குகிறது.
நீர்ச்சத்துடன் இருங்கள்
உங்களை எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றத்துடனும் வைத்திருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். ஏனெனில் வியர்வை உங்களுக்கு நீரிழப்பை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. கோடைகாலத்தில் தினசரி 9 கிளாஸ் வரை தண்ணீர் குடியுங்கள்.
கையில் மாற்று உடையை வைத்திருங்கள்
உங்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்றால் கையில் மாற்று உடை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். எனவே தேவைப்படும் போது இந்த மாற்று உடையை நீங்கள் அணிந்து கொள்ளலாம். அதே மாதிரி டிஸ்யூ பேப்பர் அல்லது வைப்ஸ் கொண்டு முகத்தை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு வியர்வையில் இருந்து புத்துணர்ச்சி தர உதவி செய்யும்.
தினமும் தவறாமல் குளியுங்கள்
தினமும் தவறாமல் குளிப்பது வியர்வை துர்நாற்றத்தை தடுக்க உதவுகிறது. எனவே கோடை காலத்தில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளித்து வரலாம். இதன் மூலம் பாக்டீரியாக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். தினசரி குளிப்பதன் மூலம் உடம்பை சுத்தமாக வைப்பதோடு நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படவும் முடியும். அதே மாதிரி கோடை காலத்தில் சூடான நீரில் குளிப்பதை விட குளிர்ந்த நீர் குளியலை போடுவது நல்லது.
காரசாரமான உணவுகளை தவிருங்கள்
காரசாரமான உணவுகள் உடம்பில் சூட்டை கிளப்பி அதிகப்படியாக வியர்க்க வழி வகுக்கிறது. எனவே மிளகாய், சூடான சாஸ் போன்ற காரசாரமான உணவுகளை தவிருங்கள். அதே மாதிரி வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக சேர்ப்பது உங்களுக்கு வியர்வை துர்நாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
மன அழுத்தத்தை குறையுங்கள்
மன அழுத்தமும் அதிகமாக வியர்ப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. எனவே உங்கள் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி மற்றும் சுவாச பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். உங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் ஈடுபட்டு மனதை எப்பொழுதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.
சுவாசிக்கக் கூடிய காலணிகளை அணியுங்கள்
சில பேருக்கு பாதங்கள் மட்டும் அதிகமாக வியர்க்கும். அவர்கள் நல்ல காற்றோட்டமான காலணிகளை பார்த்து வாங்கி அணியலாம். ஸ்னீக்கர்கள் வாங்கும் போது சிறிய துளைகளைக் கொண்ட காலணிகளை தேர்ந்தெடுங்கள். அதே மாதிரி ஈரப்பதத்தை உறிஞ்சக் கூடிய தடகள சாக்ஸ்களை அணிந்து செல்லலாம். வெறுங்காலுடன் செல்வது உங்களுக்கு நல்ல காற்றோட்டமான சூழ்நிலையை உண்டாக்கும்.
மருத்துவரை அணுகுங்கள்
உங்களுக்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அல்லது அதிகப்படியான வியர்வை சுரப்பிகள் இருக்கும் நிலை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். அதே மாதிரி சரும பிரச்சனைகள், கட்டுக்கு அடங்காத வியர்க்குரு இருந்தால் உடனே சரும மருத்துவரை அணுகுங்கள்.



Click it and Unblock the Notifications
