Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சரும நிறத்தை அதிகரிக்க விரும்புறீங்களா? அப்ப குங்குமப்பூவை வெச்சு இந்த மாதிரி ஃபேஸ் பேக் போடுங்க..
குங்குமப்பூ விலையுயர்ந்ததாக இருந்தாலும், இதைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளைப் போட்டு வந்தால், சரும நிறம் மேம்படுவதோடு, பலவிதமான சரும பிரச்சனைகள் நீங்கி, சருமம் நீண்ட காலம் இளமையோடு இருக்கும்.
ஒவ்வொருவருக்குமே அழகான மற்றும் பொலிவான சருமத்துடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க விரும்புவார்கள். இதற்காக பெண்கள் அடிக்கடி அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் சருமத்திற்கு பலவிதமான பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். அதில் ஒன்று தான் ஃபேஸ் பேக் போடுவது.
ஆனால் இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதை விட, இயற்கை பொருட்களால் சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும செல்கள் புத்துயிர் பெறுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். சரும நிறத்தை மேம்படுத்தும் பல இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமான ஒரு பொருள் தான் குங்குமப்பூ.

இந்த குங்குமப்பூ விலையுயர்ந்ததாக இருந்தாலும், இதைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளைப் போட்டு வந்தால், சரும நிறம் மேம்படுவதோடு, பலவிதமான சரும பிரச்சனைகள் நீங்கி, சருமம் நீண்ட காலம் இளமையோடு இருக்கும். இப்போது சரும நிறத்தை அதிகரிக்கும் சில குங்குமப்பூ ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
குங்குமப்பூ மற்றும் பால்
ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் பாலை எடுத்து, அதில் 1 சிட்டிகை குங்குமப்பூவைப் போட்டு சில மணிநேரங்கள் ஊற வைக்க வேண்டும். பின் அதை நன்கு கலந்து, பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, அந்த பாலை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பிரகாசமாகவும், பொலிவோடும் இருக்கும்.
குங்குமப்பூ மற்றும் தேன்
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அதில் 1 சிட்டிகை குங்குமப்பூவைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு பிரஷ் அல்லது விரல்ளைப் பயன்படுத்தி, அந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இப்படி அடிக்கடி முகத்திற்கு குங்குமப்பூவைப் பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகள், முகப்பருக்களைத் தடுப்பதோடு, சருமத்தை மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளும்.
குங்குமப்பூ, வேப்பிலை மற்றும் துளசி
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வேப்பிலைப் பொடி, 1 டேபிள் ஸ்பூன் துளசிப் பொடி, 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் பருக்கள் வருவதை தடுப்பதோடு, ஏற்கனவே இருக்கும் பருக்கள் உடைவதைத் தடுக்கும்.
குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டர்
நீங்கள் நீண்ட நாட்கள் இளமையாக காட்சியளிக்க விரும்பினால், இந்த குங்குமப்பூ ஃபேஸ் பேக்கை போடுங்கள். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரில் 3 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின் அதை கையால் நசுக்கி விட்டு, பஞ்சுருண்டையைக் கொண்டு ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகம் பிரஷ்ஷாக இருப்பதோடு, இளமையாகவும் காட்சியளிக்கும்.
குங்குமப்பூ மற்றும் சூரியகாந்தி விதைகள்
சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தவும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், குங்குமப்பூ சூரியகாந்தி விதைகள் உதவும். அதற்கு 1 கப் பாலில் சூரியகாந்தி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகளை இரவு தூங்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்திற்கு போட்டு வந்தால் சருமம் இளமையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.



Click it and Unblock the Notifications













