Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
39 வயதிலும் நயன்தாராவின் சருமம் இளமையா அழகாக இருக்க இந்த 'ஒரு பொருள்' தான் காரணமாம் - தெரியுமா?
Nayanthara Birthday: லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தென்னிந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார்.
நயன்தாரா பிறப்பில் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், திரைத்துறையில் நுழைந்த பின் இந்துவாக மாறியுள்ளார். இவரது புனைப்பெயர் டயானா மரியம் குரியன். இவர் கேரளாவின் மார்த்தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமின்றி, தற்போது மிகவும் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

என்ன தான் 39 வயதை நயன்தாரா எட்டினாலும், இன்னும் இவர் தனது அழகை சிறப்பாக பராமரித்து வருகிறார். இதற்கு காரணம் இவர் பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த அழகு பராமரிப்பு பொருட்கள் அல்ல, வீட்டில் உள்ள ஒரு சாதாரண பொருள் தான். அது தான் தேங்காய் எண்ணெய்.
நயன்தாரா தினமும் தேங்காய் எண்ணெயால் சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுப்பாராம். ஏனெனில் தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதோடு, சருமத்தை ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளுமாம். உங்களுக்கு வறண்ட சருமம் என்றால், நீங்களும் நயன்தாராவைப் போன்று அழகான சருமத்தைப் பெற விரும்பினால், தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பயன்படுத்துங்கள்.
கீழே தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஃபேஸ் பேக்குகளை நீங்களும் பயன்படுத்தி, உங்கள் சரும அழகை மேம்படுத்துங்கள்.
1. தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்
* ஒரு கிண்ணத்தில் 1/4 கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/4 கப் ஷியா வெண்ணெய் சேர்த்து, அடுப்பில் வைத்து உருக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை இறக்கி, தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி குறைந்தது 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வந்தால், முகம் நன்கு பளிச்சென்று மென்மையாக இருக்கும்.
2. தேங்காய் எண்ணெய் மற்றும் டீ-ட்ரீ ஆயில் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு அந்த எண்ணெயை தினமும் இரவு தூங்கும் முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வையுங்கள்.
* இப்படி தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தலாம்.
3. மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
4. தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பிரகாசமாக இருக்கும்.
5. தேங்காய் எண்ணெய் மற்றும் காபித் தூள் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பிரகாகமாக ஜொலிக்கும்.



Click it and Unblock the Notifications