Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
உங்க அக்குள் 'கப்பு' அடிக்குதா? அப்ப இதுல ஒரு பொருளை தினமும் அக்குளில் தடவுங்க போதும்...
Smelly Underarm In Tamil: வியர்வையானது உடலின் வெப்பத்தைத் தணிக்க இயற்கையாக உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. என்ன தான் வியர்வைக்கு என்று தனி வாசனை இல்லாவிட்டாலும், சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் இந்த வியர்வை சேர்ந்து கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும்.
சிலர் மீது வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீசும். அதுவும் அக்குள் பகுதியில் தான் அதிகம் வியர்த்து, துர்நாற்றம் அதிகம் வீசும். இதை மறைக்க நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் டியோடரண்ட், பர்ப்யூம் போன்றவை.

ஆனால் எத்தனை நாட்கள் பர்ப்யூம்மை அடித்துக் கொண்டு வியர்வை துர்நாற்றத்தை மறைக்க முடியும். வியர்வை துர்நாற்றத்தை இயற்கையாக போக்க வேண்டுமானால், அதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன.
அந்த வழிகளைப் பின்பற்றி வந்தால், அக்குளில் வீசும் கடுமையான வியர்வை துர்நாற்றத்தைத் தடுக்கலாம். இப்போது அக்குளில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. உங்கள் அக்குளில் வியர்வை நாற்றம் அதிகமாக வீசுமானால், ஆப்பிள் சீடர் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து, அதை பஞ்சுருண்டையில் நனைத்து, இரவு தூங்கும் முன் அக்குளில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அக்குளில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது அக்குளில் துர்நாற்றம் வீச காரணமாக இருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, அக்குளில் உள்ள சருமத்தின் pH அளவை மாற்றி, அக்குளில் வீசும் துர்நாற்றத்தை போக்கும். அதற்கு 2-3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, குளித்து முடித்ததும் பவுடருக்கு பதிலாக அக்குளில் பேக்கிங் சோடாவை தடவினால், அக்குளில் வியர்ப்பது தடுக்கப்படும்.
அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள்
டீ-ட்ரீ ஆயில், லாவெண்டர் ஆயில் போன்ற அத்தியாவசிய நறுமண எண்ணெய்களில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆஸ்ட்ரின்ஜன்ட் பண்புகள் அக்குளில் உள்ள சருமத்துளைகளை சுருக்குவதோடு, துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து, அக்குளை புத்துணர்ச்சியுடனும் நல்ல மணத்துடனும் வைத்துக் கொள்ளும். அதற்கு 5 துளிகள் அத்தியாவசிய நறுமண எண்ணெயை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து கலந்து, அந்நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அக்குளில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதனால் அக்குள் நாற்றம் தடுக்கப்படும்.
எலுமிச்சை
எலுமிச்சை ஒரு அசிட்டிக் பழம் மட்டுமின்றி, இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன. மேலும் எலுமிச்சை சாறு அக்குளில் உள்ள சருமத்தின் pH அளவைக் குறைத்து, அக்குகளில் பாக்டீரியாக்கள் பெருக்கமடையாமல், அக்குளை நல்ல மணத்துட்ன் வைத்துக் கொள்ளும். அதற்கு எலுமிச்சையை எடுத்து, அதை இரண்டாக வெட்டி, அக்குளில் நேரடியாக தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதனால் அக்குள் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் போன்றவை அதிகம் இருப்பதோடு, இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிகிறது மற்றும் அக்குளில் நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து, அக்குளை மென்மையாக வைத்துக் கொள்கிறது. அதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து, அதை நேரடியாக அக்குளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.



Click it and Unblock the Notifications
