Latest Updates
-
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா?
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பற்றி மக்களிடையே நிலவும் கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்!
Plastic Surgery: தற்போது பெண்களும் ஆண்களும் தங்களை அழகாக காட்ட நிறைய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக செலிபிரிட்டிகள் இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்வது உண்டு.
இருப்பினும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்த ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே நிலவி வருகின்றன. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பற்றிய தவறான கருத்துக்கள் அதன் நன்மைகளையும் சேர்த்து மறைத்து விடுகிறது.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் உங்கள் முகம், புருவம், உதடு மற்றும் மார்பகம் பெரிதாக்குதல் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த வகையில் மாற்ற முடியும். சரி வாங்க இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் நிலவும் கட்டுக்கதைகளையும் அதற்கு பின்னால் உள்ள உண்மைகளை பற்றியும் நாம் அறிந்து கொள்வோம்.
கட்டுக்கதை 1: பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பெண்களுக்கு மட்டுமே
உண்மை : பொதுவாக ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே அதிகமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர். பெண்கள் தங்களை ஆடம்பரமாகவும் அழகாகவும் காட்டிக் கொள்ள விருப்பப்பட்டனர். ஆனால் தற்போது ஆண்களும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள முன் வந்துள்ளனர். இதற்காக அவர்களும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இதில் 15-20% ஆண்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் ஈடுபடுகின்றனர்.
ஆண்கள் பொதுவாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறைகளான ஃபேஷியல் ஃபில்லர்ஸ், நெக் லிஃப்ட், ரைனோபிளாஸ்டி, கன்னம் பெருக்குதல் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே இன்றைய மாடர்ன் உலகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது.
கட்டுக்கதை 2 : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது தோற்றத்தை பொருத்து செய்யப்படுகிறது
உண்மை : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு தோற்றமே முக்கிய காரணமாக அமைகிறது என்று மக்கள் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறானது. தங்களை அழகுபடுத்த மட்டுமே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதில்லை. எதாவது விபத்து அல்லது காயங்கள் ஏற்பட்டால் அவர்களின் முகத்தை சீர்படுத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சிலர் பிறப்பு குறைப்பாட்டை சரி செய்யவும், மார்பக புற்று நோய் போன்ற கவலைகளை நிவர்த்தி செய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்கின்றனர். சுவாசத்தை நிவர்த்தி செய்ய ரைனோபிளாஸ்டி போன்ற சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
சிலருக்கு காதுகள் நீண்டு காணப்பட்டால் காதுகளின் அளவை மாற்ற அல்லது குறைக்க பின்னபிளாஸ்டிக்கை செய்கின்றனர். எனவே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது தோற்றத்தை அடிப்படையாக கொண்டு மட்டும் செய்யப்படுவதில்லை.
கட்டுக்கதை 3 : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிறகு மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்
உண்மை : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிறகு சில வாரங்களிலேயே நீங்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியும். ஆனால் உங்கள் காயங்கள் குணமாக சில நாட்கள் எடுக்கலாம். இருப்பினும் பெரும்பாலான நோயாளிகள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு எளிதில் திரும்பி விடுகின்றனர். உதாரணமாக, ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகலாம்.
நீங்கள் ஃபேஸ்லிஃப்ட் அறுவை சிகிச்சை மற்றும் மார்பகத்தை பெரிதாக்க விரும்பினால், அதற்கு இன்னும் கூடுதல் வாரங்கள் ஆகும். வயிறு கட்டிகள் போன்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் உள்ளன, அவை குணமடைய அதிக காலம் எடுக்கும். இருப்பினும் குணமடைதல் என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. சிலர் விரைவாக குணமடையலாம் சிலருக்கு நீண்ட நாட்கள் எடுக்கலாம். எனவே உங்களுக்கு தேவையான ஓய்வை எடுத்து பழைய நிலைக்கு திரும்புங்கள்.
கட்டுக்கதை 4: பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தும் போடோக்ஸ் போன்ற நச்சுக்கள் ஆபத்தானவை
உண்மை : போடோக்ஸ் என்பது ஒரு குறிப்பிட்ட க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் பாக்டீரியத்தால் சுரக்கும் நச்சு ஆகும். இந்த போடோக்ஸ் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவே கொடுக்கப்படுகிறது. மருத்துவர் உங்களுக்கு சில அளவு மட்டுமே செலுத்துவார். எனவே இது உங்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காது.
கட்டுக்கதை 5 : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை எப்போதும் கவனிக்கத்தக்கது
உண்மை : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உங்களுக்கு நுனுக்கமாக செய்யப்படுகிறது. நன்றாக அதைச் செய்யும் போது அது வெளியே தெரிவதில்லை. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த நபர் உங்களுக்கு அருகில் இருந்தாலும் அதை கண்டறிய இயலாது. ஒவ்வொரு ஆண்டும் பல பெண்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையானது செய்யப்படுகிறது.
கட்டுக்கதை 6 : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையானது வயதான செயல்முறையை தடுக்கிறது
உண்மை : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் உங்கள் வயதான செயல்முறையை தடுக்க முடியாது. வயதாகுவது இயற்கையானது என்பதால் அது தானாகவே நடைபெறுகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வயதான செயல்முறையை மெதுவாக்காது அல்லது நிறுத்தாது. உங்களுடைய வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி இவற்றால் வயதான செயல்முறை பாதிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் வயதாகுவதை தடுக்கலாம் என்பது தவறானது.



Click it and Unblock the Notifications