Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஆண்களே! தொப்பையை மறைக்கும் ஃபேஷன் டிப்ஸ் வேண்டுமா? இத படிங்க...
40 வயதுக்குள்ளாக இருக்கும் எந்த ஒரு ஆணும் தங்களுடைய தொப்பையான வயிற்றைக் காட்ட விரும்புவதில்லை. நமது இடுப்பைச் சுற்றிளும் தேவையற்ற வகையில் தொற்றிக் கொண்டிருக்கும் அந்த சதைகளை வெளியே தூக்கிச் செல்வதில் யாருக்கும் மகிழ்ச்சியும் இருக்கப் போவதில்லை.
இதற்கு காரணம் வாழ்க்கை முறை அல்லது மன அழுத்தம் என என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும், அறியாமையும், சோம்பேறித்தனமும் தான் உண்மைக் காரணங்கள் என்பதை அனைவரும் தெளிவாக உணர்ந்திருப்பார்கள். இந்த சதையை உங்களால் குறைக்க முடியாமல் இருந்தாலும், ஸ்மார்ட் ஆகவும், அவற்றை மறைக்கும் வகையிலும் உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் சில ஐடியாக்களை நாங்கள் கொடுத்துள்ளோம்.
இதுப்போன்று வேறு சில: ஆண்களின் உடை அலமாரியில் கட்டாயம் இருக்க வேண்டியவைகள்!!!
தொப்பையை தெளிவாக காட்டும் இறுக்கமான உடைகளை தவிர்க்கவும். உங்களுடைய வயிற்றின் தசைகளுக்கு இடம் தரும் வகையிலான கேசுவல் சட்டைகளை அணிந்தால் தொப்பையின் தசைகள் பெருமளவு மறைந்திருக்கவும், அதன் உண்மையான பரிமாணம் வெளியே தெரியாமலும் இருக்கும்.
ஏற்கனவே உங்கள் வயிறு வித்தியாசமாக இருக்கும் நேரத்தில், அதற்கு சற்றும் ஏற்காத வகையிலான உடைகளை அணிவது மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயமாகும். இவையிரண்டும் இணைந்து உங்களைக் காணும் போது இரட்டை கொடுமை போன்று தான் இருக்கும்.
சுவாரஸ்யமான வேறு: குளிர்காலங்களில் ஆண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சில விதிமுறைகள்!!!
எனவே, மிகவும் டைட்டான அல்லது மிகவும் லூஸான உடைகளை அணிவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும், எளிமையாகவும் மற்றும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காத வகையிலும் உடையணிவது மற்றுமொரு வழிமுறையாகும். இந்த வழிமுறையை பயன்படுத்தினால் உங்களுடைய உடை மற்றும் தொப்பை யாருடைய கவனத்தையும் ஈர்க்கப் போவதில்லை.

டார்க் கலர்களை தேர்ந்தெடுங்கள்
அடர்ந்த(Dark) வண்ணங்களை கொண்ட உடைகள் உங்களை சற்றே ஒல்லியாக இருப்பதைப் போலவும் மற்றும் தொப்பையின் உண்மையான பரிமாணத்தை மறைத்து காட்டவும் உதவி செய்யும். இந்த வகையிலான ஆடைகள் ஒரு கவசம் போல் செயல்பட்டு, உங்களை ஷார்ப் ஆக காட்டுகின்றன. நேவி ப்ளூ, கருப்பு, பழுப்பு போன்ற வண்ணங்களை பயன்படுத்தி அழகாக தோற்றமளிக்கலாம்.

இறுக்கத்தை தளர்த்துவோம்
இறுக்கமான உடைகள் உங்களுடைய தொப்பை சதையை மிகவும் சரியாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. எனவே மிகவும் இறுக்கமோ அல்லது தளர்ந்தோ இல்லாத வகையிலான மற்ற்றும் உங்களுடைய வயிற்றுக்கு ஏற்ற வகையான சட்டைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் அணியும் டீ-சர்ட்கள் கூட் உங்களுடைய தொப்பையை மறைக்கும் வகையில் சற்றே லூஸாக இருக்க வேண்டும்.

ஜாக்கெட்
நல்லதொரு மேலாடையை அணிந்து கொள்வதன் மூலம் தொப்பையை பிறருடைய பார்வையிலிருந்து மறைக்க முடியும். சரியான உடைகளை அணதல் போன்ற பிற வழிமுறைகளுடன், நீங்கள் தொப்பையை மறைக்க முயலும் போதெல்லாம் நல்லதொரு ஜாக்கெட்டை கையோடு வைத்திருந்து பயன்படுத்துங்கள். அது உங்களுடைய தொப்பையை மற்றவர்கள் கவனிப்பதை குறைப்பதுடன், அதை சிறிதளவே தெரியும் வகையில் மறைக்கவும் செய்யும்.

ஜீன்ஸ்
கேசுவல்ஸ் என்று வரும் போது ஃபிட்டாக இருக்கும் டி-சர்ட் மற்றும் ஜாக்கெட் போன்றவற்றை பயன்படுத்தும் நீங்கள், கீழே அணியும் உடைகள் உங்களுடைய வயிற்றைத் தொடும் முன்னர் முடிந்து விடும் வகையில் அணிய வேண்டும். இவ்வாறு லோ-ரைஸ் ஜீன்ஸ்களை அணியும் போது உங்களுடைய அதிகபட்ச சதைகள் மறைக்கப்படுகின்றன. மேலும், உங்களுடைய உடலின் பிற பகுதிகளும் மெல்லியதாக இருக்கும் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

டக்-இன்
உங்களுடைய சட்டைகளை டக்-இன் செய்து போடுவதன் மூலம், தொப்பையை மறைத்திட முடியும். மிகவும் இறுக்கமில்லாத ஒரு கேசுவல் சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு, அதை டக்-இன் செய்தால் உங்களுடைய தொப்பையை யாருக்கும் தெரியாமல் மறைத்திட முடியும்.

எளிமையே வளமை!
ஏற்கனவே உங்களுடைய வயிறு பெருத்து, தொப்பை அசிங்கமாய் தெரிந்து கொண்டிருக்கும் வேளைகளில், நீங்கள் அணியும் உடைகளும் அதைப் போலவே பளபளவென்று இருந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காதவாறு அணிய வேண்டும். எனவே, எளிமையான மேட்சிங்கும், குறைவான பளபளப்பும் உடைய வண்ணங்களை கொண்ட உடைகளை அணிந்து, மற்றவர்களின் கவனத்தை அதிகளவு ஈர்க்காமல் இருக்க முடியும்.

துணி தைப்பவர்
உங்களுக்கு ஏற்ற வகையில் உடைகளை தைக்கும் நல்லதொரு டெய்லரிடம் சென்று, உங்களுடைய உடலுக்கு ஏற்ற வகையிலான உடைகளை தைத்து போடுவது சிறந்ததாகும். இதன் மூலம் உங்களுடைய ஸ்டைல் மற்றும் உடைகளை வித்தியாசமாக இல்லாமலும், மோசமாக இருக்குமாறும் அணியும் அவசியம் தவிர்க்கப்படும்.



Click it and Unblock the Notifications
