Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கோடையிலும் குளு குளு சருமத்திற்கு கேரட் ஃபேசியல் மாஸ்க்!

தற்போது நாம் மாசடைந்த சுற்றுசூழலில் வாழ்ந்து வருகிறோம். இதனால் சருமமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தைக் காக்க வேண்டியுள்ளது.
இந்த கோடையில் சூரிய கதிரானது நம் சருமத்தில் நேராகப் படுவதால் நம் சருமத்திற்கு தேவையான சத்தானது குறைந்து வறண்டு விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சருமத்தை அக்கறையுடன் காக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
கோடை கால வெயில் கொடுமையிலிருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க எத்தனையோ லோஷன்கள் உள்ளிட்டவ இருக்கின்றன. இருந்தாலும், நாம் செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் நம் வீட்டில் இருக்கும் கேரட்டை பயன்படுத்தி பாதுகாக்கலாம். கேரட் நம் உடலுக்கு மட்டும் உகந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் சிறந்தது.
இந்த கேரட் ஃபேசியல் மாஸ்க்கை எண்ணெய் பசை மற்றும் சாதாரண சருமம் உள்ளவர்கள் செய்யலாம். சரி கேரட் ஃபேசியல் மாஸ்க் எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்ப்போமா...
கேரட் ஃபேசியல் மாஸ்க் -செய்முறை
தேவையான பொருட்கள் : 2-3 கேரட் , 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் , 1/2 ஸ்பூன் தேன் , லெமன் ஜூஸ்
பயன்படுத்தும் முறை:
கேரட்டை வேகவைத்து மசித்து கொள்ளவும் , பின்னர் அதனுடன் 1/2 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ், தேவையான அளவு தண்ணீர் கலந்து மாஸ்க் செய்யவும். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும்.
பிறகென்ன கேரட்டை எடுங்க, பேசியல் மாஸ்க்கை செய்யுங்க, பொலிவான முகத்துடன் வெளியில் கிளம்புங்க..



Click it and Unblock the Notifications