Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சமயலறை கூட ஒரு அழகு நிலையம் தான்!!!

* பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. அதற்கு சமையலறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியிலேயே மருந்து இருகிறது. மிளகு சிறிது, 1/2 டீஸ்பூன் அரிசியை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு நன்கு மென்மையாக அரைத்து, அதனை பருக்களின் மீது, வைத்து, காய்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மறைந்துவிடும்.
* மூக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளை நீக்க, சமையலில் பயன்படுத்தும் தக்காளியை தோலுடன் அரைத்து, முக்கில் தடவி, காய விடவும். இதனால் அவை தானாக உதிர்ந்துவிடும். பின் மூக்கு பார்க்க மென்மையாக அழகாக இருக்கும்.
* உதடுகள் நிறமிழந்து, அழகிழந்தது போல் தோன்றுகிறதா? அதற்கு சிறிது பீட்ரூட்டை எடுத்து, அதனை அரைத்து, உதடுகளின் மீது தினமும் தடவி வந்தால், உதடுகள் லிப்ஸ்டிக் போட்டது போல் காணப்படும்.
* முகத்தில் உள்ள வெயிலினால் ஏற்பட்ட கருமையைப் போக்க, பாலுடன் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி, காய வைத்து, பஞ்சை நீரில் நனைத்து, துடைத்து எடுக்க வேண்டும்.
* அழகைப் பிரதிபதிப்பதில் கண்களுக்கு முக்கிய பங்குண்டு. அத்தகைய கண்களில் சிலருக்கு கருவளையம், களைப்பு போன்றவை ஏற்படும். அவற்றை போக்க வாழைப்பழத்தில் சிறிது பாலை விட்டு, மசித்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
எனவே பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் செல்வதை விட, வீட்டில் சமையலறையில் இருக்கும் பொட்களை வைத்தே, ஈஸியாக அழகைப் பராமரித்து, வீட்டு அழகியாக ஜொலியுங்கள்...



Click it and Unblock the Notifications