Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கண்களுக்கு செயற்கை கண் இமைகள் வைக்கப் போறீங்களா!!!

செயற்கை கண் இமைகளைப் பொறுத்த டிப்ஸ்...
செயற்கை கண் இமைகள் சற்று பெரிதாக நீளமாக இருக்கும். ஆகவே அப்போது அதனை நம் கண்களுக்கு ஏற்ப சரியான வடிவத்தில் மற்றும் நீளத்தில் ட்ரிம் செய்ய வேண்டும். ஏனெனில் அப்போது தான் அது நம் கண்களுக்கு ஏற்ற அழகைத் தரும். அதுமட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கும் இமைகள் சற்று வளைந்து சுருண்டு உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
நம் கண்களின் வடிவத்திற்கு ஏற்ப ட்ரிம் செய்த பின்னர், அதனை அப்படியே கண்களில் பொறுத்த முடியாது. மேலும் அதன் முனைகளை நேரடியாக பசையில் தடவியும் கண்களில் வைக்க முடியாது. ஆகவே அப்போது பசையை கைகளின் பின்னால் தடவி, பிறகு கண் இமைகளை ட்வீசர் கருவியைக் கொண்டு, கண்களில் மெதுவாக கவனமாக பொறுத்த வேண்டும். இதனால் கண்களில் பசை பரவாமல் தடுக்கலாம்.
இமைகளை கண்களில் சரியாகப் பொறுத்திய பின், கை விரல்களைக் கொண்டு, சற்று அழுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தும் போது, பார்த்து கவனமாக அழுத்த வேண்டும். முக்கியமாக அதிக அழுத்தத்தை கொடுக்காமல் இருந்தால் நல்லது. இல்லையென்றால் அது வெளியே வந்துவிடும். அவ்வாறு கண்களில் பொறுத்தியப் பின்னர், விரல்களை அதன் மேல் 30-40 நொடிகள் வைத்து, காய வைக்க வேண்டும். பிறகு மெதுவாக கைகளை எடுக்க வேண்டும்.
எப்போது கண் இமைகள் காய்ந்துவிடுகிறதோ, அப்போது அதன் மேல் மஸ்காராவை தடவலாம். ஏனெனில் மஸ்காரா தடவினால் கண் இமைகள் நீளமாக அழகாக தெரியும். மேலும் மஸ்காரா தடவியப் பின்னரும், விரல்களை வைத்து, இமைகளை சற்று அழுத்த வேண்டும். இது கூட இமைகளை கண்களில் நன்கு பொறுத்த உதவும் ஒரு இயற்கை பொருள். மேலும் மஸ்காராவை போடும் முன், கண் இமைகளை சீவும் சீப்பைக் கொண்டு ஒரு முறை சீவ வேண்டும். இதனால் இமைகள் சரியாக சுருண்டு இருக்கும்.
எப்போது செயற்கை கண் இமைகளைப் பொறுத்துகிறோமோ, அப்போது கண்களுக்கு ஐ-லைனர் போடும் போது, சிறிது இடம் விட்டு போட வேண்டும். இதனால் செயற்கை கண் இமைகள் அழகான தோற்றத்தில் இயற்கை இமைகளைப் போன்று காணப்படும். வேண்டுமென்றால் இந்த ஐ-லைனரை மெல்லியதாகவும், அடர்த்தியாகவும் போடலாம். அது உங்களது விருப்பத்தை பொறுத்தது.
இவ்வாறு செயற்கை கண் இமைகளை பொறுத்தினால், கண்கள் அழகாக காண்பதோடு, முகமும் அழகோடு காணப்படும். முக்கியமாக செயற்கைக் கண் இமைகளை பொறுத்தும் போது, கண்களுக்கு ஐ-ஷாடோ பவுடரை போட வேண்டாம், இதனால் இமைகள் சற்று களைந்தது போல் தோன்றி, அழகைக் கெடுக்கும்.



Click it and Unblock the Notifications