Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மேக்-கப் தவறுகள், முதுமைத் தோற்றத்தை தரும்!!!
அழகை விரும்பாதவர்கள் இந்த உலகில் இருக்கமாட்டார்கள். அதிலும் பெண்கள் தான் இவற்றிற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுப்பார்கள். அவர்கள் மேக்-கப் போடாமல் எங்கும் செல்லமாட்டார்கள். வீட்டை விட்டு வெளியே காலை எடுத்து வைக்கிறார்கள் என்றால், அவர்கள் மேக்-கப் போட்டுவிட்டார்கள் என்று அர்த்தம். அந்த அளவு அவர்கள் அழகை விரும்புவார்கள். மேலும் ஷாப்பிங் சென்றால், அவர்கள் நிச்சயம் ஏதாவது ஒரு அழகுப் பொருளை வாங்காமல் வரமாட்டார்கள்.
அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு, சில நேரங்களில் மேக்-கப் போட்டால், முதுமைத் தோற்றத்துடன் காணப்படுவார்கள். இதற்கு பெரும் காரணம், அவர்களுக்கு எப்படி சரியாக மேக்-கப் போட வேண்டும் என்பது தெரியவில்லை என்று அர்த்தம். மேலும் சிலர் நன்கு மேக்-கப் போட தெரியும். இருப்பினும், அவர்களும் மேக்-கப்பிற்கு பின் பாட்டிப் போன்று காட்சியளிப்பார்கள். எனவே இத்தகைய தோற்றம் எதனால் வருகிறது, என்ன தவறுகளை மேக்-கப்பின் போது செய்கிறோம் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் சரியாக மேக்-கப் போட்டு அழகான தோற்றத்துடன் இருங்கள்.

ஃபௌண்டேஷன்
அளவுக்கு அதிகமானால் பாதிப்பு என்பது தெரியும். அப்படி தான் மேக்-கப்பில் போடும் ஃபௌண்டேஷன் அதிகமானாலோ அல்லது பயன்படுத்தாமல் இருந்தாலும், அது பார்ப்பதற்கு ஒருவித முதுமைத் தோற்றத்தை தரும். ஆகவே இந்த ஃபௌண்டேஷனை சரியான அளவில் பயன்படுத்தினால், முகம் நன்கு அழகாக காண்பதோடு, பொலிவோடும் காணப்படும்.

சரும வறட்சி
சருமம் வறட்சியாக இருந்தால், முதுமைத் தோற்றத்தை அளிக்கும். ஆகவே சருமம் வறட்சி உள்ளவர்கள், தினமும் மாய்ச்சுரைசரை தடவி வர வேண்டும். அதிலும் இரவில் படுக்கும் முன் சருமத்திற்கு கோல்டு க்ரீம்களை தடவி படுத்தால், சருமம் எப்போதும் வறட்சியின்றி ஈரப்பசையுடன் இருக்கும்.

பவுடர்
ஃபௌண்டேஷன் பயன்படுத்தியப் பின் முகத்திற்கு பவுடரை போட்டால் தான், மேக்-கப்பானது நன்கு முகத்தில் தங்கி, மேக்-கப் முழுமையடைந்து போன்று அழகாக இருக்கும். அதற்காக நிறைய பவுடரை முகத்திற்கு போடக்கூடாது, அதிலும் கண்களுக்கு அருகில் அதிகம் பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால், அவை கண்களைச் சுற்றி ஒருவித சுருக்கம் போன்ற தோற்றத்தைத் தரும். பின்னர் பார்த்தால், பாட்டி போன்று தான் காணப்படுவீர்கள்.

கண் மேக்-கப்
முகத்திற்கு மேக்-கப் போடும் போது முக்கியமாக கண்களுக்குத் தான் அதிகமான மேக்-கப் போடுவோம். ஏனெனில் முகத்தை அழகாக வெளிப்படுத்துவது கண்கள் தான். ஆகவே அவ்வாறு கண்களுக்கு கிளிட்டர் வகையான மேக்-கப்களை பயன்படுத்தும் போது, அதிகமாக பயன்படுத்திவிடாமல், லேசாக உபயோகித்தால் தான், கண்கள் அழகாக வெளிப்படும். இல்லையெனில் கண்கள் பொலிவற்று, சுருக்கங்கள் உள்ளது போல் வெளிப்படுத்தும்.

டார்க் லிப்ஸ்டிக்
எப்படி கண்கள் முகத்தை அழகாக வெளிப்படுத்துகிறதோ, அதேப்போல் தான் உதடுகளும் அழகாக காண்பிக்கிறது. ஆகவே அத்தகைய உதடுகளுக்கு மிகவும் அடர்ந்த நிறமுள்ள லிப்ஸ்டிக் போட்டால், அவை உதடுகளில் கோடுகள் போன்று வெளிப்படுத்தி, மேக்-கப்பிற்கான அழகையே கெடுத்துவிடும். எனவே லிப்ஸ்டிக் போடும் போது, மிகவும் மென்மையான நிறத்தை பயன்படுத்தி, லிப் கிளாஸ் போட்டால், அதன் அழகே தனி தான்.



Click it and Unblock the Notifications