Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
பொலிவான சருமத்தைப் பெற நடிகைகள் இந்த ஃபேஸ் பேக்குகளை தான் யூஸ் பண்றாங்களாம்.. என்னன்னு பாருங்க..
Indian Celebrities Homemade Face Packs: பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடிகைகளைப் பிடிக்கும். அப்படி பிடிக்கும் நடிகைகளின் அழகின் ரகசியத்தையும் தெரிந்து கொள்ள ஆவல் கொள்வோம். நடிகைகள் தங்களின் சரும அழகை மேம்படுத்த அவர்கள் சருமத்திற்கு கொடுத்து வரும் பராமரிப்பு தான் முக்கிய காரணம். அதோடு அவர்கள் தங்கள் உணவுகளிலும் கவனமாக இருப்பார்கள்.
நிறைய பேர் நடிகைகள் தங்கள் சரும அழகை பராமரிக்க லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வருவதாக நினைப்போம். ஆனால் அது உண்மையல்ல. நிறைய நடிகைகள்தங்கள் அழகை பராமரிக்கவும், மேம்படுத்தவும், வீட்டின் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அதைப் பற்றி பல நடிகைகள் நேர்காணல்களில் தெரிவித்தும் உள்ளனர். கீழே ஒருசில பிரபலமான நடிகைகள் தங்கள் அழகை மேம்படுத்த எந்த மாதிரியான நேச்சுரல் ஃபேக்குகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் காண்போம்.
1. கரீனா கபூரின் சந்தன ஃபேஸ் பேக்
பாலிவுட் நடிகையான கரீனா கபூர் தனது பிரகாசமான சருமத்திற்கு சந்தன ஃபேஸ் பேக் தான் முக்கிய காரணம் என்று நேர்காணல்களில் கூறியுள்ளார். இந்த சந்தன ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர், 2 துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய், 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது பாலை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் தான் இவரது அழகிற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
2. பிரியங்கா சோப்ராவின் ஃபேஸ் பேக்
நடிகை பிரியங்கா சோப்ராவின் அழகின் ரகசியத்திற்கு அவர் பயன்படுத்தி வரும் ஒரு நேச்சுரல் ஃபேஸ் பேக் காரணமாம். இந்த ஃபேஸ் பேக்கை ஒருபோதும் பயன்படுத்த தவறமாட்டாராம். அது என்ன ஃபேஸ் பேக் என்றால், ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர், பாதி எலுமிச்சையின் சாறு மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். மேலும் அத்துடன் சிறிது சந்தன பவுடர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்தும் கலந்து கொண்டு, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டுமாம்.
இது தவிர பிரியங்கா சோப்ரா ஓட்ஸ் ஃபேஸ் பேக்கையும் போடுவாராம். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடருடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
3. அனன்யா பாண்டேவின் ஃபேஸ் பேக்
நடிகை அனன்யா பாண்டேவின் பொலிவான சருமத்திற்கு அவரது அம்மா போடும் ஒரு நேச்சுரல் ஃபேஸ் பேக் தான் காரணமாம். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவ 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் பொலிவிழந்த சருமத்திற்கு நல்ல பொலிவைத் தருவதாகவும் அனன்யா பாண்டே கூறியுள்ளார்.
4. தீபிகா படுகோனேவின் ஃபேஸ் பேக்
நடிகை தீபிகா படுகோனே தனது அழகை மேம்படுத்த தனது பாட்டி கூறிய ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இந்த ஃபேஸ் பேக்கானது மஞ்சள் தூள் மற்றும் தயிர் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு தயிரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் ஈஸியானதாக இருந்தாலும், சருமத்தில் மாயங்களைப் புரியக்கூடியவை என்றும் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
5. தமன்னாவின் ஃபேஸ் பேக் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப்
நடிகை தமன்னா சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க, மூன்று பொருட்களைக் கொண்ட ஒரு நேச்சுரல் ஃபேஸ் ஸ்கரப்பை பயன்படுத்துவாராம். இந்த ஃபேஸ் ஸ்கரப் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பட்டுப் போன்று வைத்துக் கொள்ளும். இந்த ஸ்கரப்பிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர், 1 டீஸ்பூன் காபித் தூள் மற்றும் ஆர்கானிக் தேன் ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.
மேலும் மேக்கப் போடுவதால் சருமம் அதிகம் வறண்டு போவதைத் தடுக்க தமன்னா நேச்சுரல் ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுவாராம். அதுவும் இந்த ஃபேஸ் பேக்கை கடலை மாவு, தயிர், ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் கொண்டு போடுவாராம். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications