For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா? எப்படி சரிபண்றதுனே தெரியலயா?... இதோ ரொம்ப சிம்பிள்....

கழுத்துப் பகுதியின் பின்புறம் இருக்கின்ற கருமையை நீக்குவதற்கு என்ன மாதிரியான வீட்டு உபயோகப் பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

By Mahibala
|

முகத்தைப் பராமரித்து அழகாக வைத்துக் கொள்ளும் நாம் கழுத்துப் பகுதியை, குறிப்பாக கழுத்தின் பின்பகுதியைப் பற்றி அக்கறை கொள்வதே கிடையாது. குளிக்கும்போதும் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதியென்றால் காதும் பின்பக்க கழுத்தும் தான். அதைப் போக்க சில எளிய வழிகள் உண்டு. அவை என்னென்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாறு ஏராளமான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகிறது. அதிலும் குறிப்பாக, சருமப்பராமரிப்பில் எலுமிச்சையின் பயன்பாடு மிக அதிகம். கழுத்தின் கருமையைப் போக்குவதிலும் எலுமிச்சைச்சாறு அதிவேகமாகச் செயல்படுகிறது.

எலுமிச்சை சாறுடன் சமஅளவு ரோஸ்வாட்டரை எடுத்துக் கொண்டு கலந்து, இந்த கலவையைக் பின்பக்க கழுத்தில் அப்ளை செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, இந்த சீரமை அப்ளை செய்துவிட்டுப் படுத்து, அடுத்த நாள் காலையில் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரையிலும் இதைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

MOST READ: வாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

ஓட்ஸ் ஸ்கிரப்

ஓட்ஸ் ஸ்கிரப்

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தக்காளி ஜூஸைக் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு, கழுத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரையிலும் காய விடவேண்டும். அதன்பின், நன்கு தேய்த்துக் கழுவவும். இது சருமத்துக்கு நல்ல மாய்ச்சரைஸராகப் பயன்படும். சருமத்திலுள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கும். கழுத்திலுள்ள கருமை மாயமாய் மறைந்து போகும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. என்சைமை தூண்டி சருமத்தில் இருக்கும் மாசு, மருக்களை நீக்க உதவும். இது சருமத்தை நீரோட்டமாக வைத்துக் கொண்டு ஃபேட்டி ஆசிட், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றை சருமத்துக்குக் கொடுக்கிறது.

MOST READ: இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?...இத படிங்க... தெரிஞ்சிக்கங்க...

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் உங்களுடைய சருமத்தின் பிஎச் (PH) அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுகிறது. ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடக் கூடாது. ஆப்பிள் சீடர் வினிகரை சருமத்தில் பயன்படுத்தி முடித்த பின், நிச்சயமாக மாய்ச்சரைஸரைப் பயன்படுத்த வேண்டும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிக அளவில் இருக்கிறது. அது சருமத்தை மிருதுவாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும். அதோடு இது ஒரு சிறந்த பிளீச்சிங் ஏஜெண்ட்டாகவும் கூட செயல்படுகிறது. அதோடு சருமத்தினுடைய நிறத்தை மேம்படுத்தி கருமையைக் குறைக்கும்.

MOST READ: புண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

ஆலிவ் ஆயிலும் எலுமிச்சையும்

ஆலிவ் ஆயிலும் எலுமிச்சையும்

ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டுக்குமே இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் உண்டு. இது சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, சருமத்தின் நிறத்தை அதிகமாக்கிக் காட்டும். சம அளவு ஆலிவ் ஆயிலையும் எலுமிச்சையையும் எடுத்துக் கொண்டு நன்கு கலக்கி கருமை உள்ள இடத்தில் தடவுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தி வந்தால், சருமம் தெளிவடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Home Remedies For Black Neck Tan

A glowing face and a dark, tanned neck – definitely not a good combo! We pamper our face with regular facials and massage treatments at the salon. However, we don’t take enough care enough of our neck. And, as a result, it becomes dull and pigmented.
Story first published: Wednesday, September 18, 2019, 17:57 [IST]
Desktop Bottom Promotion