Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ஒரே வாரத்தில் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைப் போக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்..!
தற்போதுள்ள சூழலில் ஆண் பெண் இருவருமே வேலைக்கு செல்கிறோம்.. அதனால் அதிக நேரம் லேப் டாப் பார்ப்பது அத்தியாவசியமாகி விட்டது. அதை விட்டால் மொபை போனில் வாட்ஸ் ஆப் பார்ப்பது.. அதனையும் விட்டால் டிவி பார்ப்பது.. அதிக வேலை காரணமாக நன்றாக தூங்காமல் இருப்பது.. அதுமட்டுமா? வாரத்தில் 2 முறையாவது சினிமா தியேட்டர் சென்று புதிதாக ரிலீஸ் ஆகும் சினிமாவை பார்ப்பது என டிஜிட்டல் ஸ்கிரீன் முன்புதான் அதிகமான நேரத்தை செலவிட வேண்டியுள்ளது..
அதனாலேயே நாம் நம் கண்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது நல்லது.. அப்படி கவனித்துக் கொள்ளாவிட்டால் முதலில் வருவது கண்களுக்கு கீழே வரும் கருவளையம்தான்.. சரி அது வராமல் எப்படி தடுப்பது? அப்படி வந்தால் எப்படி ஒரே வாரத்தில் சரிச்செய்வது? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

கருவளையங்களை எதிர்த்துப் போராடவும் மறைக்கவும் உதவும் சில எளிய இயற்கையான கண் ஃபேஸ் பேக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, போதுமான அளவு தூங்கவும், நிறைய தண்ணீரும் குடித்து வர சீக்கிரமாக குணமாகிவிடும்..
காபி மாஸ்க்
காபியின் பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இத்தகைய காபி தூள் கண்களுக்குக் கீழே உள்ள கருமையை நீக்குவதற்குப் பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து பின் கழுவவும். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தேனை வேண்டுமானால் பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், கருவளையம் மறைந்துவிடும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. இது கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தோன்றுவதைத் தடுக்கிறது மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள சுருக்கங்களைக் குறைக்கிறது. பாதாம் எண்ணெயுடன் சிறிது தேன் சேர்த்து தினமும் கண்களைச் சுற்றி தேய்த்து வந்தால் கருவளையம் நீங்கும்.
பால் மற்றும் பேக்கிங் சோடா மாஸ்க் 4 டேபிள் ஸ்பூன் பாலில் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து க்ரீம் வரும் வரை நன்கு கிளறவும். பின்னர் குளிர்விக்க குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின் இந்தக் கலவையை கண்களைச் சுற்றி தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது கருவளையத்தை நீக்கி கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
வெள்ளரி மாஸ்க்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக வெட்டி 1/2 மணி நேரம் குளிரூட்டவும். பின் கண்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
அன்னாசி மாஸ்க்
அன்னாசி மாஸ்க் கருவளையங்களை நீக்க மற்றொரு இயற்கை பேக் ஆகும். அன்னாசி பழச்சாற்றுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தடவவும். இந்தக் கலவையை கண்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவவும். இப்படி தினமும் இரண்டு வாரங்கள் செய்து வந்தால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் முற்றிலும் மறைந்துவிடும்.
குளிர்ந்த கிரீன் டீ
க்ரீன் டீ பேக்குகள் மற்றும் பிளாக் டீ பேக்குகள் இரண்டும் சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் திறன் கொண்டவை. தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை 5-10 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், பின்னர் 10-15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இப்படி தினமும் செய்து வந்தால் கருவளையம் நீங்கி வீக்கம் குறையும்.
சரியான தூக்கம்
கருவளையங்களை போக்க முக்கியமானது சரியான தூக்கம் ஆகும். அதிக நேரம் மொபைல் பயன்படுத்தாமல் தூங்கினால் கருவளையம் மெல்ல மெல்ல குறைந்துவிடும். மேலும் சரியான நேரத்தில் ஃபேஷியல், மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தி கரு வளையத்தினை போக்கலாம். ஃபேஷியல் செய்வதனால் தோலானது இளமையாக இருப்பதோடு, புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications