Latest Updates
-
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
பல் பிரச்சனையா? தினமும் 2 நிமிடம் இப்படி துலக்குங்கள்..!
பெரும்பாலான பல் மருத்துவர்கள், வாய்வழி சுகாதாரத்தைப் பேணவும், ஆரோக்கியமாக இருக்கவும், காலையிலும், மாலையிலும் ஒருமுறையாவது ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குமாறு பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது உங்கள் நாளை ஆரோக்கியமான குறிப்பில் தொடங்க போதாது. பற்கள் மற்றும் ஈறுகளை திறம்பட சுத்தம் செய்வதோடு, வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுவதால், உங்கள் பற்களை சரியான வழியில் துலக்குவது சமமாக முக்கியமானது. ஆனால் நீங்கள் சரியான முறையில் பல் துலக்குகிறீர்களா? என்ற கேள்விக்கு இந்த பதிவில் பதிலை தெரிந்துக் கொள்ளுங்கள்..

ஒவ்வொரு நபருக்கும் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. வாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது உங்கள் வாயை சுத்தமாகவும், உங்கள் முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவதை அமெரிக்க பல் மருத்துவ சங்கம் பரிந்துரைக்கிறது.
நீங்கள் சரியாக பல் துலக்கினால், பற்களுக்கு இடையில் மற்றும் நாக்கில் உள்ள பிளேக் மற்றும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன. ஈறு நோய் மற்றும் பல் சிதைவைத் தடுப்பதோடு, வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. நம்மில் பலருக்கு சரியாக பல் துலக்கத் தெரியாது. எனவே எப்படி சரியாக பல் துலக்குவது என்று இப்போது பார்க்கலாம். இதைப் படித்து பல் துலக்கி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
1. முதலில் பிரஷ்ஷை தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அதில் சிறிது பற்பசையை போடவும். பற்பசைகள் பல கடைகளில் விற்கப்படுகின்றன. ஃவுளூரைடு உள்ள உங்களுக்கு பிடித்த பேஸ்ட்டை வாங்கி பயன்படுத்தவும். ஏனெனில் புளோரைடு பேஸ்ட் பற்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது.
2. நீங்கள் துலக்கத் தொடங்கும் போது, உங்கள் வாயின் முன் பற்களில் தூரிகையை வைத்து மேலும் கீழும் தேய்க்கவும். பின்னர் வட்ட இயக்கத்தில் பற்களை மெதுவாக தேய்க்கவும். இப்படி 15 வினாடிகள் பல் துலக்குங்கள்.
3. பிறகு வாயைத் திறந்து கீழ்ப் பற்களை இருபுறமும் 15 விநாடிகள் தேய்க்கவும். பின் பற்களின் மேல் பகுதியை 15 விநாடிகள் தேய்க்கவும். பின்னர் பற்களின் பக்கவாட்டு பகுதியை 15 விநாடிகள் தேய்க்கவும். இப்படித் துலக்கும் போது, பற்களை அழுத்தாமல் மென்மையாக வட்ட இயக்கத்தில் மெல்ல மெல்ல தேய்க்கவும். இதனால் கரைகள் நீங்குகிறது.
4. அடுத்து, பற்களின் பின்புறத்தை 30 விநாடிகள் தேய்க்கவும். இவ்வாறு பற்களின் பின்பகுதியை சுத்தம் செய்யும் போது, ஈறுகளில் உள்ள அழுக்குகள் வெளியேறாமல், ஈறுகளுக்கு சேதம் ஏற்படாதவாறு மெதுவாக தேய்க்கவும்.
5. பிறகு நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். வாய்வழி சுகாதாரம் என்று வரும்போது, இதில் நாக்கு சுகாதாரமும் அடங்கும். நாக்கில் பாக்டீரியா அல்லது பிளேக் கூட வளரலாம். எனவே பல் துலக்கும் போதெல்லாம் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
6. இறுதியாக மீதமுள்ள பற்பசை, உமிழ்நீர் மற்றும் வாயில் உள்ள தண்ணீரை துப்பவும். பின்னர் குளிர்ந்த நீரில் உங்கள் வாயை நன்கு கொப்பளிக்கவும்.
குறிப்பு
1. பல் துலக்க எப்போதும் மென்மையான டூத் பிரஷ்களைப் பயன்படுத்துவது அவசியம்.
2. புளோரைடு பற்பசையை மட்டும் பயன்படுத்தவும்.
3. 3-4 மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்குதலை தவறாமல் மாற்றவும். இல்லையெனில் ஈறு நோய் வரலாம்.
4. ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குங்கள். காலையில் எழுந்ததும், இரவு உணவுக்குப் பிறகு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் பல் துலக்குவது மிகவும் அவசியம்.



Click it and Unblock the Notifications
