Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
நீங்கள் உங்கள் தலைமுடியில் போதுமான புரோட்டீன் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைமுடி பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து வந்தால், உங்கள் முடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்று அர்த்தம்
ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தலைமுடியானது உடலின் ஒரு சிக்கலான மற்றும் அழகான பகுதியாகும். தலைமுடியானது பார்ப்பதற்கு எளிய அமைப்பில் காணப்பட்டாலும், அந்த தலைமுடியானது பல்வேறு கூறுகளால் ஆனது. அதில் கெரட்டின் என்னும் ஒருவகையான புரோட்டீன் மிகவும் முக்கியமான பொருளாகும். இந்த புரோட்டீன் தான் தலைமுடிக்கு நல்ல அமைப்பையும், வலிமையையும் வழங்கி, தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், வெப்பம், கெமிக்கல்கள் போன்றவற்றால் தலைமுடியில் உள்ள புரோட்டீன் சேதமடைந்து, பல்வேறு தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வைக்கிறது. இதன் காரணமாகவே தற்போது பெரும்பாலான மக்கள் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறார்கள். நீங்கள் உங்கள் தலைமுடியில் போதுமான புரோட்டீன் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைமுடி பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து வந்தால், உங்கள் முடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் புரோட்டீன் சிகிச்சையை உடனே மேற்கொள்ள வேண்டும்.

முடி உடைதல்
புரோட்டீன் தான் தலைமுடியின் மிகவும் இன்றியமையாத பொருளாகும். இந்த புரோட்டீன் குறைவாக இருக்கும் போது, தலைமுடியானது பலவீனமாகி, தலைமுடி அதிகம் உடையத் தொடங்குகிறது. நீங்கள் கடந்த சில நாட்களாக உங்கள் தலைமுடி அதிகம் உடைவதைக் கவனித்து வந்தால், அது உங்கள் தலைமுடிக்கு உடனே புரோட்டீன் சிகிச்சையை வழங்க வேண்டும் என்பதன் முக்கிய அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நெகிழ்வுத்தன்மை இல்லாமை
தலைமுடியில் புரோட்டீன் குறைவாக இருக்கும் போது, முடி அதன் நெகிழ்வுத்தன்மையை இழக்க நேரிட்டு, அதன் விளைவாக தலைமுடியை சீவும் போது, முடி உடைவதோடு, முடி கம்பி போன்று நீட்டிக் கொண்டிருக்கும். உங்கள் தலைமுடியும் இப்படி கம்பி போன்று விறைத்துக் கொண்டிருந்தால், உங்கள் தலைமுடிக்கு புரோட்டீன் சிகிச்சை தேவை என்ற அர்த்தம்.

பொலிவிழந்த தோற்றம்
நல்ல ஆரோக்கியமான தலைமுடியானது பொலிவோடு காணப்படும். ஆனால் தலைமுடி பொலிவிழந்து, மந்தமாக காட்சியளித்தால், புரோட்டீன் குறைபாடு உள்ளது என்று அர்த்தம். ஏனெனில் புரோட்டீன் தான் தலைமுடிக்கு நல்ல அமைப்பு மற்றும் வலிமையைத் தருகிறது. முடியில் இந்த புரோட்டீன் பற்றாக்குறை இருந்தால், முடி உயிரற்றதாக காட்சியளிக்கும்.

அதிக வறட்சி
உங்கள் தலைமுடி தேங்காய் நார் போன்று இருக்கிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியில் போதுமான புரோட்டீன் இல்லை என்று அர்த்தம். புரோட்டீன் குறைபாடானது, தலைமுடியில் உள்ள க்யூட்டிகிளில் சேதத்தை ஏற்படுத்தி, முடியில் அதிக வறட்சியை உண்டாக்கும். எனவே உங்கள் தலைமுடியும் இப்படி நார் போன்று இருந்தால், புரோட்டீன் சிகிச்சையைக் கொடுங்கள்.

பலவீனமான மயிர்கால்கள்
உங்கள் தலையில் கை வைத்தாலே, தலைமுடி கொத்தாக வருகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்று அர்த்தம். புரோட்டீன் தான் தலைமுடிக்கு வலிமையை அளிக்கிறது. இந்த புரோட்டீன் குறைவாக இருக்கும் போது, அது தலைமுடியை பலவீனமாக்கி, எளிதில் உதிரச் செய்வதோடு, தலைமுடியின் அடர்த்தி குறைந்து, முடியானது எலிவால் போன்று மாற்றும். எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே புரோட்டீன் சிகிச்சையை தலைமுடிக்கு அளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications