Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
தலைமுடி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சில சீகைக்காய் ஹேர் மாஸ்க்குகள்!
நீங்கள் நீண்ட நாட்களாக தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, முடி உடைவது போன்ற தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்தால், சீகைக்காயைக் கொண்டு உங்கள் முடிக்கு பராமரிப்புக்களைக் கொடுங்கள்.
தலைமுடியைப் பராமரிக்க அக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது சீகைக்காயைத் தான். சீகைக்காயானது தலைமுடியின் அமைப்பை பாதுகாப்பதோடு, முடிக்கு நல்ல வலிமையையும், முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. சொல்லப்போனால் பழங்காலத்தில் நம் முன்னோர்களின் தலைமுடி நன்கு ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த சீகைக்காயைத் தான். அதனால் தான் நம் பாட்டிமார்கள் தலைமுடிக்கு சீகைக்காயைப் போட்டு குளிக்க சொல்கிறார்கள்.

நீங்கள் நீண்ட நாட்களாக தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, முடி உடைவது போன்ற தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்தால், சீகைக்காயைக் கொண்டு உங்கள் முடிக்கு பராமரிப்புக்களைக் கொடுங்கள். கீழே தலைமுடி பிரச்சனைகளுக்கு சீகைக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொடுகு தொல்லைக்கு...
நீங்கள் பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால், சீகைக்காயுடன் தயிர், வெந்தயம், நெல்லிக்காய், ஆலிவ் ஆயில் போன்றவற்றை சேர்த்து ஒரு ஹேர் பேக் தயாரித்து பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெந்தய பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் சீகைக்காய் பொடி, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் தடவி 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் களிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும் .

முடி உடைவதைத் தடுக்க...
உங்கள் தலைமுடி பலவீனமாக உள்ளதா? முடி அதிகம் உடைகிறதா? அப்படியானால் சீகைக்காயைப் பயன்படுத்துங்கள். அதற்கு 2 ஸ்பூன் சீகைக்காய் பொடியை ஒரு பௌலில் எடுத்து, அதில் ஒரு பெரிய டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, தலைமுடியின் வேரில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், தலைமுடி நன்கு வலுவாகும்.

தலைமுடி உதிர்வைத் தடுக்க...
உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? என்ன செய்தாலும் தலைமு உதிர்வது நிற்கவில்லையா? அப்படியானால் சீகைக்காய் ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள். அதற்கு சீகைக்காய் பொடியுடன், முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இந்த ஹேர் பேக் தலைமுடியை வலுவாக்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பொலிவிழந்து தலைமுடிக்கு...
உங்கள் தலைமுடி பொலிவிழந்து அசிங்கமாக காணப்படுகிறதா? உங்கள் தலைமுடிக்கு நல்ல பொலிவு கிடைக்க வேண்டுமா? குறிப்பாக உங்கள் முடி வறண்டு உள்ளதா? அப்படியானால் சீகைக்காயுடன் தேன் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த முடி நன்கு பொலிவோடு மென்மையாக அழகாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
