Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு கேரட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
முடி மென்மையாக இருக்க, முடி உதிராமல் இருக்க, முடி கருமையாக இருக்க என்று பல்வேறு வழிமுறைகளில் முடி அழகை நாம் பராமரித்து வருகிறோம். இப்படி எல்லா விதத்திலும் உங்கள் முடியை பராமரிக்கும் பொருள் தான் கேரட்.
ஒவ்வொரு மனிதனின் உடல் அமைப்பிற்கு அழகு சேர்ப்பது தலை மற்றும் அதில் இருக்கும் முடி. இந்த தலைமுடியைப் பாதுகாக்க நாம் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். முடி மென்மையாக இருக்க, முடி உதிராமல் இருக்க, முடி கருமையாக இருக்க என்று பல்வேறு வழிமுறைகளில் முடி அழகை நாம் பராமரித்து வருகிறோம். இப்படி எல்லா விதத்திலும் உங்கள் முடியை பராமரிக்க ஒரு அற்புத பொருள் உண்டு. அதுவே கேரட். உங்க தலைமுடிக்கு மிகுந்த நன்மையைத் தரும் ஒரு பொருள் கேரட்.

பல்வேறு முக்கிய நன்மைகளை கூந்தலுக்கு தரும் சாத்தியங்களைக் கொண்டதாக கேரட் இருப்பதால், பல்வேறு கூந்தல் பராமரிப்புப் பொருட்களில் கேரட் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்படி வெளிதயாரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே கேரட் கொண்டு நமது கூந்தல் அழகைப் பராமரிக்க முடியும்.
பல்வேறு செயற்கை பொருட்கள் மற்றும் ரசாயங்களுடன் சேர்த்து தயாரிக்கப்படும் இத்தகைய பொருட்களை சந்தையில் வாங்குவதை விடுத்து வீட்டிலேயே நற்பதமான கேரட் கொண்டு தயாரிக்கும் ஹேர் பேக் அல்லது ஹேர் மாஸ்க் உங்களுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும். உங்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு கேரட் பயன்படுத்தி செய்யும் இந்த தீர்வுகளை முயற்சித்துப் பாருங்கள். கேரட்டுடன் இதர மூலப்பொருட்களை சேர்த்து உங்கள் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவோம் வாருங்கள்!

கேரட் மற்றும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
* கேரட் - 1
* வாழைப்பழம் - 1
* யோகர்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்து ஒரு மென்மையான விழுதாக்கிக் கொள்ளவும்.
* உங்கள் உச்சசந்தலையில் இந்த விழுதைத் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளிலும் இந்த விழுது இருக்கும்படி முழுவதுமாகத் தடவவும்.
* அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.
* பிறகு மென்மையான மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
குறிப்பு : வாரத்திற்கு ஒரு முறை இதனைப் பயன்படுத்தலாம்

முடி வளர்ச்சிக்கு கேரட் மற்றும் அவகேடோ
தேவையான பொருட்கள்:
* கேரட் - 1
* அவகேடோ - ½ பழம்
* தேன் - 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
* உங்கள் உச்சசந்தலையில் இந்த விழுதைத் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளிலும் இந்த விழுது இருக்கும்படி முழுவதுமாகத் தடவவும்.
* அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.
* பிறகு மென்மையான மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
குறிப்பு : வாரத்திற்கு ஒரு முறை இதனைப் பயன்படுத்தலாம்

முடி வளர்ச்சிக்கு கேரட் எண்ணெய்
தேவையான பொருட்கள்:
* சுத்தமான ஆர்கானிக் கேரட் எண்ணெய் - தேவைக்கேற்ப
பயன்படுத்தும் முறை:
* கேரட் எண்ணெய்யை அடுப்பில் வைத்து வெதுவெதுப்பாக சூடாக்கி எடுத்துக் கொள்ளவும்.
* இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். தலையின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த எண்ணெய்யை நன்றாகத் தடவவும்.
* ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.
* பின்பு மென்மையான மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
குறிப்பு : வாரத்திற்கு ஒரு முறை இதனைப் பயன்படுத்தலாம்

முடி இழப்பைப் போக்க கேரட் கொண்டு ப்ரீ - ஷாம்பூ சிகிச்சை
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
* யோகர்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
* இந்த விழுதை உங்கள் உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும்.
* அரை மணி நேரம் ஊறவிடவும்.
* பிறகு மென்மையான மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
குறிப்பு : வாரத்திற்கு ஒரு முறை இதனைப் பயன்படுத்தலாம்

முடி வளர்ச்சிக்கு கேரட் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2
* கற்றாழை சாறு - ½ கப்
பயன்படுத்தும் முறை:
* கேரட்டை அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.
* கேரட் சாற்றுடன் கற்றாழை சாற்றைக் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
* இந்த ஜூஸ் கலவையை உங்கள் உச்சந்தலை முழுவதும் தெளிக்கவும்.
* இந்த சாறு தலையில் உறிஞ்சப்படும்வரை நன்றாக மசாஜ் செய்யவும்
* ஒரு இரவு முழுவதும் அப்படியே விடவும்
குறிப்பு : வாரத்திற்கு ஒரு முறை இதனைப் பயன்படுத்தலாம்



Click it and Unblock the Notifications
