Latest Updates
-
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்
கோழி இறக்கை மாதிரி உங்க முடி பரட்டையா இருக்கா? இந்த 6 கண்டிஷ்னரை ட்ரை பண்ணுங்க... அப்புறம் பாருங்க!
சேதமடைந்த முடியைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இயற்கையான கண்டிஷனர் சிறந்தது. உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைச் சேகரித்து, இரசாயனங்கள் இல்லாத கண்டிஷனர்களை நீங்கள் வீட்டிலேயே உருவாக்கலாம்.
நீங்கள் அழகாக இருப்பதற்கும் உங்கள் அழகான தோற்றத்திற்கும் உங்கள் முடி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால், உங்கள் தலைமுடியை கவனமாக பராமரிப்பது அவசியம். வாரத்திற்கு ஒரு முறையாவது தலைமுடிக்கு எண்ணெய் தடவுதல், ஷாம்பு போடுதல் மற்றும் கண்டிஷனிங் செய்தல் ஆகியவை செய்ய வேண்டும். வறண்ட முடி, முடி உதிர்தல், நரை முடி, வலுவிழந்த முடிகள் போன்ற பொதுவான முடி பிரச்சனைகள் உள்ளவர்கள் பொருத்தமான கண்டிஷனரைப் பயன்படுத்துவது அவசியம். கண்டிஷனிங் என்பது உங்கள் தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும் ஒரு முறையாகும். உங்களுக்கு உடனடி விளைவுகளை வழங்கக்கூடிய ரசாயணங்கள் நிறைந்த கண்டிஷனர்கள் சந்தைகளில் ஏராளமாக கிடைக்கின்றன. இவை உங்கள் கூந்தலுக்கு நல்லதல்ல.

சேதமடைந்த முடியைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இயற்கையான கண்டிஷனர் சிறந்தது. உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைச் சேகரித்து, இரசாயனங்கள் இல்லாத கண்டிஷனர்களை நீங்கள் வீட்டிலேயே உருவாக்கலாம். பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள இயற்கை கண்டிஷனர்களை முயற்சி செய்யுங்கள்.

வாழைப்பழ ஹேர் கண்டிஷனர்
தேவையான பொருட்கள்: ஒரு துருவிய வாழைப்பழம், 3 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி பால், மூன்று தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை: அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து நன்றாக பேஸ்ட் போல மசித்துகொள்ளவும். அதை முடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு தலைமுடியை நன்கு கழுவ வேண்டும்.

வினிகர் மற்றும் முட்டை கண்டிஷனர்
தேவையான பொருட்கள்: 2-3 முட்டைகள், வினிகர் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி, மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி.
செய்முறை: பொருட்களை ஒரு பிளெண்டரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். முடியின் நுனியில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் உங்கள் முடியை நன்கு அலசவும்.

தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் தேன் கண்டிஷனர்
தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி, தயிர் இரண்டு தேக்கரண்டி, மற்றும் ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி.
செய்முறை: அனைத்தையும் நன்றாகக் கலந்த பேஸ்டை தலைமுடியில் தடவவும். 15-20 நிமிடங்கள் அப்படியே தலையில் வைத்திருக்கவும். பின்னர், குளிர்ந்த நீரில் முடியை நன்றாக அலச வேண்டும்.

யோகர்ட் ஹேர் கண்டிஷனர்
தேவையான பொருட்கள்: ஆறு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு முட்டை.
செய்முறை: தயிர் சேர்த்து முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். உங்கள் தலைமுடியை மென்மையான துண்டு அல்லது துணியால் மூடி வைக்கவும். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் முடியை அலசவும்.

ஆப்பிள் சைடர் வினிகர் கண்டிஷனர்
தேவையான பொருட்கள்: இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு கப் தண்ணீர்.
செய்முறை: அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டாக்கவும். உங்கள் தலைமுடியில் இதைப் பயன்படுத்துங்கள். பின்னர், 15-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முடியை கழுவ வேண்டும்.

அலோ வேரா ஹேர் கண்டிஷனர்
தேவையான பொருட்கள்: நான்கு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
செய்முறை:பொருட்களை நன்றாகக் கலந்து மிருதுவான பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் தலைமுடியில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இறுதி குறிப்பு
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம் அல்லது மாற்றலாம். சிறந்த முடிவுகளுக்கு இயற்கையான இந்த ஹேர் கண்டிஷனரை தவறாமல் பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
