Latest Updates
-
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
ஆண்களே! இனி வழுக்கை பற்றிய கவலையே வேண்டாம்! இதை ஃபாலோ பண்ணாலே போதும்...
ஆண்களுக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான கூந்தல் பிரச்சனைகளில் வழுக்கை பிரச்சனையும் ஒன்று. எனக்கு வழுக்கை விழுந்துடவே கூடாது என்ற பயம் தான் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கிறது.
ஆண்களுக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான கூந்தல் பிரச்சனைகளில் வழுக்கை பிரச்சனையும் ஒன்று. எனக்கு வழுக்கை விழுந்துடவே கூடாது என்ற பயம் தான் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கிறது. ஆண்கள் வழுக்கைப் பற்றிய பயத்தாலேயே, தூக்கமில்லாத இரவுகளைத் தரக்கூடும்.

மீதமுள்ள முடியின் கடைசி இழைகளையாவது எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என்று முயற்சித்து, வழுக்கையை எதிர்த்து நம்பிக்கையற்ற போரை பலரும் நடத்துகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கான நல்ல செய்தியை தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

வழுக்கை ஏற்படுவதற்கான காரணம்
ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வழுக்கை அல்லது ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்களை பாதிக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். வழுக்கை ஆண்களுக்கு ஏற்படுவது மிகவும் பொதுவானது. அதிலும், 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 50% க்கும் அதிகமானோர் வழுக்கை பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு பொதுவான காரணங்களில் ஒன்று மரபியல் அல்லது குடும்ப வரலாறாக இருக்கலாம். ஆயுர்வேதத்தின் படி, அதிகப்படியான பித்த தோஷம் உள்ளவர்கள், மற்றவர்களை விட அதிகமாக வழுக்கை பிரச்சனைக்கு ஆளாகக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், ரசாயனப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது போன்ற காரணங்களால் வழுக்கை ஏற்படுவது சகஜமான ஒன்றாகிவிட்டது. வழுக்கை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவே முடியாதா என்றால்? நிச்சயமாக முடியும் என்பதே பதில். அதிலும், ஆயுர்வேத வைத்தியங்கள் வழுக்கையை தடுப்பதில் சிறப்பான உதவுகின்றன என்று கூறப்படுகிறது.

வழுக்கையைத் தடுக்க உதவும் ஆயுர்வேத வைத்திய முறைகள்!
ஆயுர்வேத எண்ணெய்
கூந்தல் வளர்ச்சிக்கான சிறந்த ஆயுர்வேத சிகிச்சைகளில் ஒன்று வல்லாரை பிருங்கராஜ் தைலம் எனும் மூலிகை எண்ணெய். இந்த எண்ணெய் கூந்தல் வறட்சியைத் தவிர்ப்பதன் மூலம், முடியின் வேருக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வைக் குறைக்கிறது. இது உங்கள் மன அழுத்தத்தை நீக்கி, இளநரை ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. இந்த எண்ணெய்களை பயன்படுத்தி தலைக்கு தொடர்ந்து மசாஜ் செய்வது, உங்கள் முடி வேகமாக வளர உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவிடும்.

உணவில் மூலிகைகளை சேர்க்கவும்
கற்றாழை, கறிவேப்பிலை, செம்பருத்தி, நெல்லிக்காய், வெந்தயம், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த உணவுகள் கூந்தலுக்கு வலு சேர்க்கக்கூடிய சிறந்த மூலிகைகளாகும். நீங்கள் இந்த மூலிகைகளை தினசரி உணவில் தவறாமல் சேர்த்து கொள்ளலாம் அல்லது இவற்றை பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரித்தும் பயன்படுத்தலாம். இவற்றை எப்படி பயன்படுத்தினாலும் சிறப்பான பலனை வழங்கிடும் என்பதில் சந்தேகமில்லை.

அஸ்வகந்தா
ஆண்களின் வழுக்கையைத் தடுக்க உதவும் பொதுவான ஆயுர்வேத மூலப்பொருளில் அஸ்வகந்தாவும் ஒன்றாகும். கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வளர்ச்சியை குறைக்கும் ஹார்மோனான கார்டிசோலை, அஸ்வகந்தாவின் உதவியுடன் திறம்பட கட்டுப்படுத்திட முடியும். அஸ்வகந்தாவை தண்ணீரில் ஊறவைத்து பேஸ்ட்டாக அரைத்து, கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் அலசிடவும்.

வல்லாரை கீரைகள்
வல்லாரை கீரைகள், ஒருவரின் நினைவாற்றலை மேம்படுத்தவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவும் சிறந்த வழிகளில் ஒன்று. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையைத் தடுக்கவும் இந்த இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வல்லாரை இலைகளை நசுக்கி தண்ணீரில் கலந்து, அந்த நீரை உங்கள் கூந்தல் முழுவதும், குறிப்பாக உச்சந்தலையில் தடவ வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பிரச்சனை நீங்கும்.

வெந்தயம்
மிகவும் பிரபலமான ஆயுர்வேத மூலப்பொருளில் வெந்தயமும் ஒன்றாகும். இது ஆண்களுக்கு வழுக்கையிலிருந்து விடுபட பெரிதும் உதவிடும். வெந்தயம் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளித்து, வலிமையாக்குகிறது. வெந்தயம் பொடுகு தொல்லையையும் சிறந்த முறையில் எதிர்த்துப் போராடும். அதற்கு முதலில் வெந்தயத்தை ஒரு கடாயில் பொன்னிறமாக வறுத்து, நன்கு ஆறியதும், அதை அரைத்து பொடி செய்து எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது, அந்த பொடியை சிறிது எடுத்து, தண்ணீருடன் கலந்து பேஸ்ட் பதத்தில் செய்து கொள்ளவும். இதை கூந்தலுக்கு பயன்படுத்தி வருவதன் மூலம், சிறந்த தீர்வைப் பெற்றிடலாம்.

கற்றாழை ஜூஸ்
ஆயுர்வேதத்தில் உடலில் பித்த தோஷத்தைக் குறைக்க கற்றாழை ஜூஸ் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் கற்றாழை சிறந்தது. கற்றாழையில் உள்ள கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, பி12, சி மற்றும் ஈ ஆகியவை கூந்தலின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதனை தொடர்ந்து உட்கொள்வது அல்லது கூந்தலின் மேலே தடவுவது ஆகியவை கூந்தலை உதிர்வைத் தடுத்து, வழுக்கைப் பிரச்சனை ஏற்படுவதைக் குறைத்திடும்.



Click it and Unblock the Notifications