Latest Updates
-
சனி-கேது உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் வீட்டில் அடிக்கடி பல்லியை பார்ப்பது நல்லதா? கெட்டதா? சாஸ்திரம் சொல்லும் உண்மை என்ன? -
ஆறு விரல்களை கொண்டவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா? -
5 தக்காளி இருந்தா இந்த செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
தலைமுடி ஆரோக்கியமா, அடர்த்தியா வளரணுமா? அப்ப கிச்சனில் உள்ள இந்த நேச்சுரல் ஷாம்புக்களை ட்ரை பண்ணுங்க.. -
30 வயதுக்கு பின் கோடீஸ்வரராகும் யோகமுள்ள 4 நட்சத்திரங்கள் - நீங்க பிறந்த நட்சத்திரம் இதுல இருக்கா? -
தினமும் காபி, டீ-க்கு பதிலா.. ஈவ்னிங் டைம்-ல கேரட் பால் செஞ்சு குடிங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
உங்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு காரணம் இதுதானாம் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி - ஷாக் ஆகாதீங்க -
ஜூலை இறுதியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வாழைப்பூ வாங்குனா இந்த மாதிரி திருநெல்வேலி ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
முடி ரொம்ப வறண்டு போகுதா? ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க... தலைமுடி பத்தின கவலைய விடுங்க...
பொதுவாக நீங்கள் கூந்தல் வறட்சியால் அவதிப்படுவீர்கள் என்றால் அதற்கான தீர்வை கடுகு எண்ணெய் மூலம் எப்படி பெறுவது என்பது தான் இந்த கட்டுரை. விளக்கமாகப் படித்துப் பயன்பெறுங்கள்.
குளிர்காலம் வந்துட்டாலே போதும் நம் தலைமுடிக்கும், சருமத்திற்கும் ஸ்பெஷல் பராமரிப்பு தேவைப்படுகிறது. இந்த காலத்தில் சருமமும், கூந்தலும் வறண்டு போய் விடும். ஏன் நீங்கள் அதிக நேரம் ஆபிஸில் ஏர் கண்டிஷன் அறையில் இருப்பதால் கூட கூந்தல் வறண்டு போகக் கூடும்.

கூந்தல் உதிர்வு
இதனால் கூந்தல் உதிர்வு, பிளவு, கூந்தல் வளர்ச்சி போனறற பிரச்சினைகள் ஏற்படலாம். கூந்தலும் பொலிவிழந்து போய் முரடாக மாற ஆரம்பித்து விடும். பார்ப்பதற்கு களையிழந்து போய் காணப்படும் உங்க் கூந்தலை கடுகு எண்ணெய் கொண்டே அழகாக்கி விடலாம். இந்த கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் கூந்தலுக்கு ஒரு நல்ல கண்டிஷனர் மாதிரி செயல்படுகிறது. வறண்ட கூந்தலால் ஏற்படும் அரிப்பு போன்றவற்றை இந்த எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்து சரி செய்யலாம். தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

தேவையான பொருட்கள்
- கடுகு எண்ணெய்
- யோகார்ட்

செய்முறை
ஒரு பெளலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடுகு எண்ணெய் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கலக்கவும். அதை தலையில் தடவிக் கொள்ளுங்கள். ஒரு சுத்தமான துண்டை எடுத்து அதை சூடான நீரில் நனைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அதை தலையில் கட்டி 30-40 நிமிடங்கள் வைக்கவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசுங்கள். இப்படி செய்து வந்தால் சீக்கிரமே வறண்ட கூந்தல் பொலிவாக மாறும். கூந்தல் அழகு பெறும்.

பயன்படுத்தும் முறை
கடுகு எண்ணெய் தேங்காய் எண்ணெயைவிட சற்று அடர்த்தி அதிகம் என்பதால் அதில் பிசுபிசுப்புத் தன்மையும் அதிகமாக இருக்கும். சாதாரணமாக தலைக்கு தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வது போல் அப்ளை செய்து கொள்ளலாம். வெளியில், அலுவலகத்துக்கு என்று செல்பவர்களாக இருந்தால், இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையுடன் கலந்து லேசாக சூடு செய்து தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரையிலும் நன்கு அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.
காலையில் எப்போதும் போல மைல்டான ஷாம்பு கொண்டு தலையை அலசி விடுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து இதை செய்து பாருங்கள். அதனால் கிடைக்கும் பலனை நீங்களே நன்கு உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications