Latest Updates
-
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
வழுக்கை மண்டையில கிடுகிடுன்னு முடி வளரணுமா..? அப்போ இந்த 5 வழிகளை செஞ்சா போதும்..!
ஒரு காலத்துல எவ்ளோ முடி இருந்துச்சி தெரியுமா..?! இப்போ எல்லாமே கொட்டி போச்சி... என்று ஆணுகளும், என் முடி 60அடி கூந்தலாக இருந்துச்சி இப்போதான் இப்படி எல்லாமே கொட்டி போச்சி என்று பெண்களும் வேதனையுடன் கூறும் வார்த்தைகளை பல வீடுகளில் கேட்க முடியும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே 5 குறிப்புகள் உள்ளது.

குறிப்பாக முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றிற்கு இந்த குறிப்புகள் நன்கு உதவுகின்றன. இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். இத்தனை நாள் நீங்கள் வேதனை பட்ட முடி சார்ந்த பிரச்சினைகளை எளிதில் தீர்க இங்கே எளிமையான வழிகள் உள்ளன. இந்த குறிப்புகளை பயன்படுத்தி வழுக்கைக்கு முற்றுபுள்ளி வையுங்கள்.

ஏன் வழுக்கை..?
முடி உதிர்வு அதிகரித்தால் இறுதியாக வழுக்கை தான் பரிசாக கிடைக்கும். முடியை உதிர வைக்க சில காரணிகள் உள்ளன. குறிப்பாக சீரற்ற வாழ்க்கை முறை, முடியை பராமரிக்காமல் இருத்தல், எண்ணெய்யை தவிர்த்தல், மரபணு ரீதியான பிரச்சினைகள் போன்றவற்றை கூறலாம்.

குறிப்பு #1
வழுக்கை மண்டையில் முடியை வளர வைக்கும் எளிய முறை இதுவே. இதற்கு தேவையான பொருட்கள்..
முட்டை 1
கிரீன் டீ 4 ஸ்பூன்

செய்முறை
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொண்டு, நன்றாக அடித்து கொள்ளவும். பிறகு இதனுடன் கிரீன் டீ சேர்த்து தலைக்கு தடவி அரை மணி நேரம் சென்று தலையை அலசவும். இந்த குறிப்பு முடியை இறுக்கமாக மாற்றும். இதனால் முடி உதிர்வு இருக்காது.

குறிப்பு #2
வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த குறிப்பு உதவும். அதற்கு தேவையானவை..
கற்றாழை ஜெல் 10 பீஸ்
கிரீன் டீ பேக் 4

தயாரிப்பு முறை
முதலில் வெந்நீரில் டீ பேக்கை ஊற வைத்து, அதன் எசென்ஸ் நீரில் இறங்கும் வரை காத்திருக்கவும். பிறகு கற்றாழையை அரிந்து இந்த நீரையும் இவற்றுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனை தலைக்கு தடவி 20 நிமிட கழித்து தலையை அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.

குறிப்பு #3
முடியை கிடுகிடுவென வளர வைக்கும் தன்மை இந்த குறிப்பிற்கு உள்ளது.
தேவையான பொருட்கள் :-
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
கிரீன் டீ 3 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் கிரீன் டீ உடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் தரவும். 30 நிமிடத்திற்கு பிறகு தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் வழுக்கையில் மீண்டும் முடி வளரும்.

குறிப்பு #4
இழந்த முடியை மீண்டும் பெற இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை...
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
கிரீன் டீ 2 ஸ்பூன்

செய்முறை
முதலில் எலுமிச்சை சாறு மற்றும் கிரீன் டீயை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து தலைக்கு தடவ வேண்டும். 20 சென்று தலையை அலசவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முடி மீண்டும் வளரும்.



Click it and Unblock the Notifications